தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்று கட்சியை தொடங்கி உள்ளார். தேர்தலுக்கு முன்பு சில முக்கிய பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார் இதை தொடர்ந்து தவறு ரசிகர்கள் பலர் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
கட்சி தொடங்கியதில் இருந்து விஜய் அது சம்பந்தமாக பல வேலைகளை செய்து வருகிறார் முதலாவதாக தற்போது கட்சியை பதிவு செய்யும் பணிகளில் தமிழக வெற்றி கழகம் செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் நீட் பிரச்சினை பற்றி பேசி இருந்தார் மேலும் கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கொடுத்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள விஜய் சினிமாவில் இருந்து முற்றிலும் விலக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பு மாநாடு நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.
2026 தேர்தலுக்கு முன்பு 1 மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, 10 மாவட்ட பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டம் வைத்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. முதல் மாநாடு வரும் செப்டம்பர் மாதம் திருச்சி நடைபெற உள்ளது.
மேலும் 100 சட்டமன்ற தொகுதிகளில் நடைப்பயணம் மேற்கொள்ளவும் விஜய் திட்டம் வைத்துள்ளதாக தமிழக வெற்றி கழகத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.