உங்க லேப்டாப் பிரச்சனை பண்ணாம... ஸ்மூத்தா வேலை செய்ய... சில டிப்ஸ்..!

Laptop Maintenence tips: இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒரு நாள் கூட வேண்டாம், ஒரு மணி நேரம் உங்கள் லேப்டாப் இயங்கவில்லை என்றாலும், உங்கள் வேலை எல்லாம் அப்படியே ஸ்தம்பித்து போய்விடும்.

 

உணவு உடை இருப்பிடம் போன்று, டிஜிட்டல் சாதனங்களும் இன்றைய அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டன. ஸ்மார்ட்போன் போல் கணினி இல்லாத வீடு இல்லை என்ற நிலையும் உண்டாகிவிட்டது.

 

1 /8

அலுவலகப் பணியில் இருப்பவர்கள் மட்டுமல்ல, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், லேப்டாப் என்பது ஒரு அத்யாவசிய பொருளாகிவிட்டது. எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும் வசதி இருப்பதால், டெஸ்க்டாப் வகை கம்ப்யூட்டரை விட, மடிக்கணினி என்னும் லேப்டாப் தான் முதல் தேர்வாக உள்ளது.  

2 /8

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த லேப்டாப் சீராக இயங்க சிறந்த பராமரிப்பு தேவை. இல்லை என்றால் நேரத்தில் காலை வாரிவிட்டு, உங்களை சிக்கலை சிக்க வைத்து விடும். சில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், உங்கள் லேப்டாப், பிரச்சனை செய்யாமல் சீராக இயங்கும்.  

3 /8

மடிக்கணினியை பயன்படுத்தும் போது, எச்சரிக்கையான இருக்க வேண்டியது அவசியம். அதற்கு தேவையான காற்றோட்டம் இருக்க வேண்டும். தூசி மற்றும் ஈரப்பதம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். அதன் அருகில் அமர்ந்து கொண்டு டீ காபி குடிப்பது சரியல்ல. தவறுதலாக சிந்திவிட்டால் பெரும் இழப்பு ஏற்படும்.  

4 /8

அதிக நேர பயன்பாடு: எட்டு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து லேப்டாப்பை பயன்படுத்துவதால் சரியல்ல. இதனால் லேப்டாப் விரைவில் சூடாகும். அதோடு உபயோகிக்காத நேரத்தில் அதன் ஷட் டவுன் செய்வது அவசியம். ஸ்லீப் மோடில் போட்டு வைப்பது நல்லதல்ல.  

5 /8

தேவையற்ற கோப்புகள்: காலப்போக்கு லேப்டாப்பில், தேவையற்ற ப்ரோக்ராம்கள் மற்றும் கோப்புகள் சேர்ந்து கொண்டு, செயல் திறனை பாதிக்கும். அவ்வப்போது இதனை கண்டறிந்து டெலிட் செய்வது அவசியம்.

6 /8

பவர் செட்டிங்: உங்கள் மடிக்கணினியின் உள்ள பவர் செட்டிங்கில், ஹைபர்ஃபார்மன்ஸ் என்னும் செட்டிங் பேட்டரி ஆயுளை குறைக்கலாம். சிறந்த செயல் திறனை கொடுக்கும் செட்டிங் என்றாலும், இது தேவை இல்லை என்றால் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

7 /8

ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர்: அசல் உரிமத்துடன் கூடிய ஆன்டிவைரஸ் மென்பொருள் ஒன்றை வாங்கி லேப்டாப்பில் இன்ஸ்டால் செய்வது முக்கியம். லேப்டாப்பை வைரஸ் தாக்கினால், அதன் வேகம் செயல்திறன் இரண்டும் பாதிக்கப்படும்.  

8 /8

விஷுவல் எபெக்ட் மற்றும் அனிமேஷன்: லேப்டாப் தோற்றத்தை அழகுப்படுத்தும் பல விஷுவல் எபெக்ட் மற்றும் அனிமேஷன்கள் விண்டோஸ் இல் இருக்கும். எனினும் இவை லேப்டாப்பின் செயல் திறனை பாதிக்கும். எனவே இதை ஆப் செய்வது நல்லது.