Smartphones: அதி விரைவாக சார்ஜ் ஏறும் டாப் 4 மொபைல்களையும், அதன் விலையையும் இந்த புகைப்படத் தொகுப்பில் நீங்கள் காணலாம்.
ஸ்மார்ட்போன் நமது வாழ்வில் தற்போது பெரிய அங்கம் வகிக்கிறது. எந்த இடத்திற்கு எப்போது நீங்கள் சென்றாலும் உங்களுடன் துணையாக வருவது ஸ்மார்ட்போனாகதான் இருக்கிறது.
அப்படி ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள், அதில் எப்போதும் சார்ஜ் நீடித்திருக்க வேண்டும் என விரும்புவார்கள், வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் மொபைலை சீக்கிரம் சார்ஜ் செய்யவும் விரும்புவார்கள்.
இந்நிலையில், விரைவாக சார்ஜ் ஏறும் மொபைல்களின் டாப் 4 பட்டியலை இதில் காணலாம். இவை ப்ரீமியம் மொபைல்களாக இல்லாமல் ஓரளவு குறைந்த விலையில் கிடைக்கிறது.
Xiaomi 11i Hypercharge 5G: இந்த ஸ்மார்ட்போனில் 4,500mAh பேட்டரி உள்ளது, இது 120W Xiaomi ஹைப்பர் சார்ஜ் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. இந்த போனை 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும் என்று கூறப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 11 இல் வேலை செய்கிறது. இதன் விலை 21 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும்.
iQOO Neo 7 Pro 5G: இந்த மொபைல் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 120W FlashCharge-ஐ ஆதரிக்கிறது. இந்த போனை 27 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும் என்று கூறப்படுகிறது. அமேசான் மூலம் நீங்கள் 32 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம்.
Redmi Note 12 Pro+ 5G: இது 4,980mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 120W Xiaomi ஹைப்பர் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இந்த போனை 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விடலாம். அமேசானில் இருந்து 27 ஆயிரத்து 999 ரூபாய்க்கு வாங்கலாம்.
iQOO Neo 7 5G: இது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 120W ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. இந்த ஃபோனை முழுமையாக சார்ஜ் செய்ய 27 நிமிடங்கள் ஆகும். இதன் விலை 24,999 ரூபாய் ஆகும்.