True Love Signs: ஒரு சிலருக்கு, தனக்கு வந்திருப்பது காதலா இல்லையா என்றே தெரியாமல் இருக்கும். அப்படி குழப்பத்தில் இருப்பவர்களுக்கான டிப்ஸ் இதோ.
காதல் உறவின் தொடக்கத்தில் பலருக்கு, ‘இது காதல்தானா, உண்மையான காதல்தானா’ என்பது போன்ற சந்தேகங்கள் எழுவது அதிகம். அப்படி சந்தேகம் வரும் உறவுகள் சமயங்களில் வெறும் ஈர்ப்பாக மட்டும் முடிந்து விடலாம். அப்படியில்லை என்றால் பெரிய காதல் உறவாகவும் வளரலாம். அப்படி, உங்களுக்கு இருப்பது உண்மையாகவே காதல்தானா என கண்டுபிடிக்க வேண்டுமா? அதற்கான டிப்ஸை இங்கு பார்ப்போம்.
ஒவ்வொரு நபருக்கும் காதல் தனித்துவமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் அனைவருக்கும் பொதுவாக மூன்று முக்கிய அறிகுறிகளே இருக்கின்றன. அவை நெருக்கம், ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு. இது, ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு மாதிரியாக வெளிபடும். இந்த மூன்றையும் உங்களது அன்புக்குரிம் அல்லது உங்களுக்கு பிடித்த நபரிடம் காண்பிக்கிறீர்கள் என்றால், அது உண்மையான காதலுக்கான அறிகுறியாகும். இதை தெளிவுப்படுத்திக்கொள்ள சம்பந்தப்பட்ட நபரிடம் நீங்கள் பேச வேண்டியது நல்லது.
நீங்கள் உங்களது எதிர்காலத்தை பற்றி நினைக்கும் போது, அதில் உங்கள் அன்புக்குரியவரையும் வைத்து நினைத்து பார்ப்பீர்கள். அவரும் உங்கள் மீது அதே போல உணர்ச்சிகளை கொண்டிருந்தால், அவரது எதிர்கால சிந்தனைகளில் நீங்கள் இருப்பீர்கள். உண்மையான காதலுக்கு இதுவும் பெரிய அறிகுறியாகும்.
காதல் உங்கள் வாழ்வில் கவனத்திற்குரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காதலில் இருப்பவர்கள், எப்போதும் இளமையுடனும் உற்சாகத்துடனும் இருப்பர். காதலால் ஏற்படும் இந்த மாற்றத்தால், உள்ளூற இருந்தே நீங்கள் வேறு மாதிரியான ஒரு மனிதராக உணர்வீர்கள். இனம் புரியாத மகிழ்ச்சியால் ஆட்கொள்ளப்படுவீர்கள். இந்த அறிகுறி இருந்தாலும் அது உண்மையான காதலுக்கு அர்த்தமாகும்.
காதலில் இருப்பவர்களுக்கு உணர்ச்சி பூர்வமாக எப்போதும் தனக்கு பிடித்தவருடன் இருக்க வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருக்கும். தனக்கு பிடித்தவரின் கவனம் தன் மீதே இருக்க வேண்டும் என்று இவர்கள் எண்ணுவர். அப்படி நீங்களும் யோசிக்கும் நபராக இருந்தால் அந்த காதல் உங்களுக்கு உண்மையாகவே வந்து விட்டது என்று அர்த்தம்.
உண்மையான அன்பு என்பது உங்கள் அன்புக்குரியவரை உள்ளூர தெரிந்து கொள்வதில் இருந்து தொடங்குகிறது. அவர்களின் உணர்வுகள், மகிழ்ச்சிகள், கோப தாபங்கள் என அனைத்தும் அவர்கள் எடுத்துக்கூறாமலேயே உங்களுக்கு புரிந்து விடும். அப்படி உங்களுக்கு ஒருவரை பற்றி அந்த அளவிற்கு தெரிந்திருக்கிறது என்றாலோ, அல்லது அவர் உங்களை நன்கு அறிந்து வைத்திருக்கிறார் என்றாலோ அது உண்மையான அன்புக்கும் காதலுக்கும் அறிகுறிதான்.
காதல், தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் இருக்கும். நீங்கள் அன்பு செலுத்துபவர், உங்களின் வாழ்க்கைக்கும் உங்களை வளர்த்துக்கொள்வதற்கும் உதவுவார். அதே போல அவரது தனிப்பட்ட வளர்ச்சிக்கு நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள். இந்த பகிரப்பட்ட வளர்ச்சி தனிநபர்களுக்கு நன்மை பயப்பது மட்டுமல்லாமல், உங்கள் உறவின் அடித்தளத்தை பலப்படுத்துகிறது.