முட்டையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், சில வகை காய்கறிகளில் அவற்றை விட அதிக சத்துக்கள் உள்ளது. அவை என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்
முட்டையில் அதிக ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. இவற்றை தினசரி சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.
முட்டையில் புரோட்டின் மற்றும் வைட்டமின் நிறைந்துள்ளது. முட்டை மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்தி ஒட்டுமொத்த ஆற்றலுக்கும் உதவுகிறது. இருப்பினும் சில காய்கறிகளில் முட்டையை விட அதிக சத்துக்கள் உள்ளது.
பட்டாணி உணவுகளில் சேர்க்கப்படும் பட்டாணியில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. உணவின் செரிமானத்திற்கு பட்டாணி அதிகம் உதவுகிறது. குறிப்பாக இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கிறது .
பசலைக் கீரை பசலைக் கீரையில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. இது உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்களை தருகிறது. ஒரு நேரம் பசலை கீரை சாப்பிட்டால் அதிலிருந்து 5.4 கிராம் புரதம் கிடைக்கிறது.