Today Horoscope In Tamil: மாசி மாதம் 10ஆம் நாளான இன்று (பிப். 22) 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும், இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் ஆகியவற்றை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
Daily Raasipalan In Tamil: இன்று மாசி மாதம், 10ஆம் நாள் சனிக்கிழமை (பிப். 22) குரோதி வருடம். சுபமான காலம்: அபிஜித் காலம் - நண்பகல் 12:09 முதல் மதியம் 12:56 வரை; அமிர்த காலம் - காலை 8:12 முதல் காலை 9:56 வரை; பிரம்மா முகூர்த்தம் - காலை 05:02 முதல் காலை 05:50 வரை. அசுபமான காலம்: இராகு - காலை 9:36 முதல் காலை 11:04 வரை; எமகண்டம் - மதியம் 2:01 முதல் மாலை 3:30 வரை; குளிகை - காலை 6:39 முதல் காலை 8:07 வரை; துரமுஹுர்த்தம் - காலை 8:13 முதல் காலை 9:00 வரை; தியாஜ்யம் - மதியம் 02:01 முதல் மதியம் 3:41 வரை. சூரியோதயம் - காலை 6:39, சூரியஸ்தமம் - மாலை 6:27. வாரசூலை: சூலம் - கிழக்கு, பரிகாரம் - தயிர். இன்று சம நோக்கு நாள் மற்றும் தேய்பிறை ஆகும். வாருங்கள் இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
மேஷம்: அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லவும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்யவும். ஜாமின் செயல்களை தவிர்க்கவும். மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் அஸ்வினி : கவனம் வேண்டும். பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும். கிருத்திகை : குழப்பமான நாள்.
ரிஷபம்: காரிய அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். சமூக பணிகளில் செல்வாக்கு உயரும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பிரீதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் கிருத்திகை : அனுகூலமான நாள். ரோகிணி : செல்வாக்கு உயரும். மிருகசீரிஷம் : முயற்சிகள் சாதகமாகும்.
மிதுனம்: சகோதரர்களால் நன்மை உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் விலகும். செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் மகிழ்வான சூழல் நிலவும். தொழில் வளர்ச்சியில் திருப்தி ஏற்படும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் மிருகசீரிஷம் : நன்மையான நாள். திருவாதிரை : இன்னல்கள் விலகும். புனர்பூசம் : திருப்தியான நாள்.
கடகம்: பிள்ளைகளுடன் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். வாழ்க்கைத் துணைவர் வழியிலான ஆதரவுகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவுபெறும். பொழுதுபோக்கு செயல்களில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். கமிஷன் வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம் புனர்பூசம் : வேறுபாடுகள் குறையும். பூசம் : ஆதரவுகள் கிடைக்கும். ஆயில்யம் : லாபகரமான நாள்.
சிம்மம்: பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். கோப உணர்ச்சிகளை குறைத்துக்கொள்ளவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புது வேலை கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். நட்பு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் மகம் : அனுபவம் ஏற்படும். பூரம் : ஆரோக்கியம் மேம்படும். உத்திரம் : ஆதாயகரமான நாள்.
கன்னி: மறதி பிரச்சனைகள் குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குறுகிய தூர பயணங்களால் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சில இடமாற்றங்கள் சாதகமாகும். அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திரம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். அஸ்தம் : ஆதரவான நாள். சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
துலாம்: உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். பயணம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். புகழ் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் சித்திரை : தெளிவுகள் பிறக்கும். சுவாதி : பொறுமையுடன் செயல்படவும். விசாகம் : புரிதல் உண்டாகும்.
விருச்சிகம்: செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். பேச்சுக்களில் பொறுமையை கையாளவும். மறைமுகமான நெருக்கடியால் மாற்றம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த சில உதவிகளில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் விசாகம் : பொறுமை வேண்டும். அனுஷம் : அனுசரித்துச் செல்லவும். கேட்டை : ஏற்ற, இறக்கமான நாள்.
தனுசு: உயரதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். அரசு சார்ந்த அதிகாரிகளுடன் அளவுடன் இருப்பது நல்லது. குழந்தைகள் வழியில் எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபார பயணங்களில் புதிய அனுபவங்கள் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். பெருமை மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மூலம் : அனுசரித்துச் செல்லவும். பூராடம் : அலைச்சல்கள் உண்டாகும். உத்திராடம் : மேன்மையான நாள்.
மகரம்: வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். ஓவியம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பனை துறையில் மேன்மை அடைவீர்கள். சுபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் உத்திராடம் : கவலைகள் நீங்கும். திருவோணம் : ஒத்துழைப்புகள் மேம்படும். அவிட்டம் : மேன்மையான நாள்.
கும்பம்: தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். மறைவான சில பொருட்களால் ஆதாயம் உண்டாகும். பூர்வீக மாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உலகியல் நடவடிக்கைகள் மனதளவில் மாற்றம் ஏற்படும். விரயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும். சதயம் : ஆதாயம் உண்டாகும். பூரட்டாதி : மாற்றம் ஏற்படும்.
மீனம்: குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மறதி பிரச்சனை குறையும். வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணி சார்ந்து சில பயணம் உண்டாகும். வியாபாரத்தை விரிவு செய்வதில் ஆலோசனை வேண்டும். கீர்த்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் பூரட்டாதி : பிரச்சனை குறையும். உத்திரட்டாதி : பொறுமை வேண்டும். ரேவதி : ஆலோசனை வேண்டும்