Personal Loan Tips: கடன்களில் பலவகை இருக்கின்றன. தனிநபர் வாங்கும் தனிக்கடனுக்கு (Personal loans) விண்ணப்பிக்க நினைத்தால், அதற்கு முன் பலவிதமாக யோசித்து, கடன் வாங்குவது பற்றி திட்டமிட வேண்டும்.
Personal Loan Tips: பொதுவாக, தேவைகளை பூர்த்தி செய்யவும், செலவுகளை ஈடுகட்டவும் தனிநபர் கடன்கள் வாங்கப்படுகின்றன. இப்போதெல்லாம் கடன்களைப் பெறுவது மிகவும் எளிதானது. தகுதியுள்ளவர்கள் வங்கிகளிடமிருந்து எளிதாக கடன் பெறலாம். இருப்பினும், தனிநபர் கடனை வாங்குவதற்கு முன் ஒன்றுக்கு இரு முறை யோசிக்க வேண்டும்.
தனிப்பட்ட கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:
ALSO READ | வங்கி கடன் கொடுக்க மறுக்கிறதா? இதோ உங்களுக்கான Tips
எதற்காக கடன் வாங்குகிறீர்கள்? வெவ்வேறு தேவைகளுக்காக நீங்கள் கடன் வாங்கலாம் என்றாலும், தவிர்க்க முடியாத செலவுகளுக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். தனிப்பட்ட கடன்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
எங்கிருந்து கடன் வாங்குவது? உங்கள் கணக்கு உள்ள வங்கியில்தான் கடன் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் தனிப்பட்ட கடன் வாங்கலாம். வங்கிகளில் மட்டுமல்ல, டிஜிட்டல் என்.பி.எஃப்.சி (NBFC) என எங்கு கடன் வாங்கினாலும், அதற்கு நல்ல credit score இருப்பது முக்கியம்.
கடனுடன் வழங்கப்படும் வசதிகளை அறிந்து கொள்ளுங்கள் தனிப்பட்ட கடனை எங்கு எடுக்க விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானிக்கும்போது, சில விஷயங்களை கவனத்தில் வைத்திருப்பது முக்கியம். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், கடன் வாங்குவதற்கான செலவு எவ்வளவு என்பதை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
தனிநபர் கடனை எடுக்கும்போது வட்டி விகிதம் மட்டுமல்லாமல் முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் மற்றும் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். தனிப்பட்ட கடன் எடுப்பதில் தொடர்புடைய அனைத்து செலவுகளையும் அறிந்து கொள்ளுங்கள்.
தனிப்பட்ட கடனை எடுக்கும்போது எவ்வளவு ஈ.எம்.ஐ செலுத்த வேண்டும் என்பதை சரிபார்க்கவும். ஈ.எம்.ஐ இல்லாத திருப்பிச் செலுத்தும் விருப்பம் உள்ளதா? எத்தனை நாட்களில் தனிப்பட்ட கடன் கிடைக்கும்? என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல, நீங்கள் கடன் பெறும் நிறுவனம், சமூக ஊடகங்களிலும் செயலில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தனிப்பட்ட கடன் தொடர்பான ஒவ்வொரு சந்தேகத்திற்கும் தீர்வு காண்பது எளிதாக இருக்கும். சிறந்த வாடிக்கையாளர் சேவையை கொண்டிருக்கும் நிறுவனத்தில் கடன் வாங்குவது சரியானதாக இருக்கும்.