நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்கள் எளிதாக சுவாசிக்க செய்ய வேண்டியவை!

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகள் சில உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் அவரகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலிமையாக உணர முடியும்.

 

1 /4

நுரையீரல் புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு சுவாசத்தில் சிரமம் ஏற்படும், இதற்கு அவர்கள் தினமும் மூச்சு பயிற்சி செய்யவேண்டும்.  இந்த பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் உதரவிதானம் வலிமைபெற்று சுவாசலிப்பதில் இருக்கும் சிரமங்களை குறைக்கிறது.  

2 /4

ஏரோபிக் பயிற்சிகள் செய்வது நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கு சுவாசத்தை சீராக்க மற்றொரு வழியாகவும்.  நோயாளிகள் ஏற்கனவே சோர்வாக இருப்பதால், மெதுவாக நடைபயிற்சி அல்லது மெதுவாக ஓடுதல் போன்ற ஏதேனும் ஒன்றை தினமும் செய்துவர வேண்டும்.  

3 /4

ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகளை தினமும் மெது மெதுவாக செய்ய தொடங்கவேண்டும், upper body stretching பயிற்சிகள் செய்வது உங்கள் இதயம் மற்றும் நுரையீரல் இரண்டையும் மேம்படுத்துகிறது.  ரேடியேஷன் தெரபி செய்த பின்னர் கட்டாயம் இந்த ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகளை செய்யவேண்டும்.  

4 /4

கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் தெரபி செய்வது உங்கள் தசைகளை வலிமையிழக்க செய்கிறது, அப்போது நீங்கள் ஸ்ட்ரெட்ச் பயிற்சிகள் செய்து தசைகளை பழைய நிலைக்கு கொண்டு வரலாம்.  உங்கள் உடலை வலிமையாக்க கூடிய சைக்கிளிங், புஷ்-அப் போன்ற சில பயிற்சிகளை நீங்கள் செய்வதன் மூலம் எலும்பு மற்றும் இதயம் பலப்படும்.