தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம் - சேலைகளுக்கு 30% தள்ளுபடி..!

Tamil Nadu government Pongal sale | தமிழ்நாடு அரசின் கோ-ஆப்டெக்ஸ் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று தொடங்கியது.

Co-optex Pongal Festival Sale | தமிழ்நாடு அரசின் கோ-ஆப்டெக்ஸ் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பட்டு சேலைகள் 30 விழுக்காடு தள்ளுபடியில் கிடைக்கும். 

1 /9

தமிழ்நாட்டில் புத்தாண்டு பண்டிகைக்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான (Pongal Gift) டோக்கன் விநியோகம் இன்னும் இரண்டு வாரத்தில் தொடங்க உள்ளது. அதிகபட்சமாக ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2 /9

இலவசமாக பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்குவது மட்டுமின்றி கூட்டுறவுத்துறை, கோஆப் டெக்ஸ் ஆகியவை மூலம் மலிவு விலையில் பொங்கல் சிறப்புத் தள்ளுபடி மளிகை பொருட்கள், பட்டு சேலைகள், கைத்தறி துணிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. அந்தவகையில் கோஆப் டெக்ஸ் பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தமிழ்நாடு அரசு இன்று தொடங்கி வைத்துள்ளது. 

3 /9

சென்னை அண்ணா சாலையில் ரூ5.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள "கோ-ஆப்டெக்ஸ் கோலம்" விற்பனை நிலையத்தை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொங்கல் திருநாள் சிறப்பு தள்ளுபடி விற்பனையை (Co-optex Pongal Festival Sale) தொடங்கி வைத்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள கலைஞர் திருவுருவச் சிலையின் எதிரில், ரூ5.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக பிரம்மாண்டமாக "கோ -ஆப்டெக்ஸ் கோலம்" விற்பனை நிலையம் கட்டப்பட்டுள்ளது. 

4 /9

இந்த மையத்தில் தான் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பொங்கல் திருநாள் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலத் தலைமைக் கைத்தறிக் கூட்டுறவுச் சங்கமாக திகழ்கிறது. 

5 /9

மேலும். தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.114 கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் சிறந்த தயாரிப்புகளை "கோ- ஆப்டெக்ஸ்" என்ற வணிக முத்திரை மூலம் வணிகப்படுத்தும் முன்னணி நிறுவனமாகச் செயல்பட்டு வருகின்றது.

6 /9

கோ-ஆப்டெக்ஸின் அனைத்து கைத்தறித் தயாரிப்புகளும் இந்திய அளவில் டெல்லி. மும்பை, கல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அமைந்துள்ள 150 நிலையங்களின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பட்டு மற்றும் பருத்தி ரக வகைகளின் பாரம்பரிய மற்றும் நாகரீக சமகால வடிவமைப்புகளைக் கொண்டு சிறந்த கைத்தறி ரகங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி விற்பனை செய்கின்றது. 

7 /9

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கியப் பண்டிகைக் காலங்களில் புதிய வடிவமைப்பு ரகங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் மனங்களை எப்போதும் கவர்ந்து வருகிறது. பாரம்பரிய பட்டு மற்றும் பருத்தி ரகங்களில் புதுமையான கருத்துக்கள் கொண்ட வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களுடன் பல மதிப்பு கூட்டப்பட்ட ரகங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 

8 /9

சென்னை அண்ணாசாலையில் உள்ள கலைஞர் திருவுருவச்சிலை எதிரில் பிரம்மாண்டமான கோலம் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையமானது, ரூ.5.60 கோடி மதிப்பீட்டில் 8.000 சதுர அடி பரப்பளவில் நான்கு தளங்களுடன் லிப்ட் மற்றும் வாகன நிறுத்தும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. முதல், இரண்டாம், மூன்றாம் தளங்கள் தலா 2,100 ச.அடி பரப்பளவிலும், நான்காம் தளம் 1. 700 ச.அடி பரப்பளவிலும் என மொத்தம் 8,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

9 /9

2024 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் பண்டிகை காலத்தில் ரூ.43.46 கோடி மதிப்பீட்டிலான கைத்தறி, பட்டு ரகங்கள் கோ ஆப்டெக்ஸ் மூலமாக விற்பனை செய்யப்பட்டன. நடப்பாண்டு (2025) பொங்கல் திருநாள் பண்டிகை காலத்திற்கு ரூ.50.00 கோடியாக சிறப்பு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாள் பண்டிகை சிறப்பு விற்பனையையொட்டி அனைத்து பட்டு மற்றும் பருத்தி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றது.