திரை உலகில் உள்ள பல கட்டமைப்புகளை உடைத்தெறிந்து, தன் தனிப்பட்ட திறமையால், வித்தியாசமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ள நடிகை வித்யா பாலன்.
திரை உலகில் உள்ள பல கட்டமைப்புகளை உடைத்தெறிந்து, தன் தனிப்பட்ட திறமையால், வித்தியாசமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ள நடிகை வித்யா பாலன்.
இந்த மாத இறுதியில் வெளிவரவிருக்கும் இப்படத்தில் கணித மேதை ஷகுந்தலா தேவியாக வித்யா நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சிறிது நேரமே வந்தாலும், அந்த நேரத்தில் இப்படத்தில் வித்யா எளிமையான முதிர்ந்த நடிப்பு மூலம் முத்திரை பதித்துள்ளார்.
ரேடியோ ஜாக்கியாகும் இல்லத்தரசி. ஒவ்வொரு இல்லத்தரசியின் உணர்வுகளையும் வெளிக்காட்டும் விதத்தில் அமைந்தது இப்படம்.
ISRO விஞ்ஞானியாய் இப்படத்தில் வித்யா நடித்துள்ளார். ஒரு விஞ்ஞானியின் மகிழ்ச்சி, ஏமாற்றம், அழுத்தம் அனைத்தையும் அற்புதமாய் வெளிக்காட்டும் நடிப்பு.
அருமையான படம், அற்புதமான திரைக்கதை, அசாதாரண நடிப்பு. தன் கணவனைத் தேடி இந்தியாவிற்கு வரும் கர்ப்பிணிப் பெண்ணாய், இப்படத்தில் நடிப்பில் மிரட்டினார் வித்யா.
கொல்லப்பட்ட சகோதரிக்காக நியாயம் கேட்கும் சகோதரியாக, மிகவும் முதிர்ந்த நடிப்பை இப்படத்தில் காட்டினார் வித்யா.
வினோதமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் மகனை தனியாக வளர்க்கும் ஒரு தாயாய் தெளிவான நடிப்பை இப்படத்தில் வெளிக்காட்டினார் வித்யா.
பரினீதா படத்தில், இன்னிசைப் பாடகியாக, கொல்கத்தாவில் வாழும் ஒரு எளிய பெண்ணாக, லாவகமான லலிதாவாக வலம் வருவார் வித்யா.
ஒரு துப்பறிவாளருக்கு இருக்க வேண்டிய துடிதுடிப்பு, பரபரப்பு அனைத்தையும் இப்படத்தில் அள்ளித் தந்தார் வித்யா.