விடாமுயற்சி படத்தில் அஜித் டபுள் ஆக்‌ஷன்?! ட்ரைலரில் ‘இதை’ கவனிச்சீங்களா?

Vidaamuyarchi Movie Trailer Decoding : விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து, இந்த ட்ரைலரில் இடம் பெற்றிருக்கும் சில முக்கியமான விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம். 

Vidaamuyarchi Movie Trailer Decoding : அஜித் நடிப்பில், 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக இருக்கும் படம், விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில், அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். படத்தின் ட்ரைலரில், அஜித், ஆரவ், அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலர் வருகின்றனர். கோலிவுட் திரையுலகம், இதுவரை யாரும் பார்த்திராத சில விஷயங்கள் இப்படத்தில் இடம் பெற்றிருப்பதாக டிரைலரில் இருப்பதாக கூறி வருகின்றனர். 

1 /7

விடாமுயற்சி படத்தில், ஏற்கனவே மங்காத்தா படத்தில் இணைந்த கூட்டணிதான் கைக்கோர்க்கின்றனர். அஜித்தான் அதிலும் இதிலும் ஹீரோ, அதே போல இரு படங்களிலும் ஹீரோயினும் த்ரிஷாதான். வில்லன், அர்ஜுன்தான். 

2 /7

விடாமுயற்சி படம், இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப்போடப்பட்டிருந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இதனை ட்ரைலரிலேயே அறிவித்திருக்கின்றனர்.

3 /7

அஜித்தும் த்ரிஷாவும் ஏற்கனவே பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கின்றனர். இப்போது மீண்டும் இந்த ஜோடியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். படத்தின் ட்ரைலரில், இவர்களின் காதல் மற்றும் அதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காண்பிக்கப்பட்டுள்ளது. 

4 /7

விடாமுயற்சி படத்தில் அஜித், “இந்த ஜென்ரேஷன் லவ் பத்தி தெரியாது. ஆனா, அந்த ஜென்ரேஷன்ல ஏதாச்சு ஒன்னு ரிப்பேர் ஆனா, அத சரி பண்ணுவாங்க” என இந்த தலைமுறையினரின் காதல் குறித்து பேசியிருக்கிறார்.

5 /7

விடாமுயற்சி படத்தில், மஞ்சள் கலர் கிரேடிங் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு அர்த்தம், இந்த படத்தில் வன்முறையும் ஆக்‌ஷனும் நிறைந்திருக்கிறது என்பதுதானாம். 

6 /7

அஜித், இந்த ட்ரைலரில், “நான் இங்கு சண்டை போட வரவில்லை” என்று ஒரு டைலாக் கூறுவார். ஆனால், இவரை சுற்றி இருக்கும் வில்லன்கள் இவரை தாக்குவதிலேயே குறியாக இருப்பர். இதனால், இவர் இந்த படத்தில் ஒரு முன்னாள் காவல் அதிகாரியாக இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. 

7 /7

விடாமுயற்சி படத்தில் ஒரு ஷாட் வைக்கப்பட்டுள்ளது. அதில், அஜித் ஒரு காஃபி ஷாப்பிற்குள் நுழைவது போலவும், அங்கு பல வில்லன்கள் அஜித்தை பார்ப்பது போலவும் ஒரு காட்சி வைக்கப்பட்டுள்ளது. அதில், நீளமான முடி கொண்ட ஒருவர் சிகரெட் பிடித்துக்கொண்டு அஜித்தை பார்ப்பது போன்ற காட்சி ஒன்று இருக்கிறது. அவர் பார்க்கவும் அஜித் போலவே உள்ளார். எனவே, இதில் அவருக்கு 2 வேடங்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.