ஒருவழியாக 5ஜியை அறிமுகப்படுத்திய வோடபோன் ஐடியா! என்ன சிறப்பம்சங்கள்?

வோடபோன் ஐடியா நிறுவனம் இந்தியாவில் தனது 5G சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கான விலைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை நீண்ட நாட்களாக வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

2 /6

ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு 5ஜி சேவைகளை வோடபோன் ஐடியா பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. 3.3GHz மற்றும் 26GHz ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.

3 /6

நீண்ட நாட்களாக இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வோடபோன் ஐடியா தனது 5G சேவைகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

4 /6

முதற்கட்டமாக இந்தியாவில் 17 மாநிலங்களில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பே ஏர்டெல் மற்றும் ஜியோ 5G சேவையை கொடுத்து வருகிறது.

5 /6

வோடபோன் ஐடியா பயனர்களுக்கு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. ப்ரீபெய்டு 5ஜி சேவை ரூ.475 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு REDX 1101 என்ற திட்டம் பயன்பாட்டில் உள்ளது.  

6 /6

தற்போது, ​​குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வோடபோன் ஐடியா 5G சேவையை பயன்படுத்த முடியும். வரும் காலங்களில் தனது சேவையை விரிவுபடுத்த திட்டம் வைத்துள்ளனர்.