கல்யாணப் பெண்ணின் வீடியோ: திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் முக்கியமான தருணம். திருமணங்களில் நடக்கும் கலாட்டாக்களும், குறும்புகளும் சடங்குகளும் என்றென்றும் மறாக்காதவை. வாழ்க்கையில் இந்த அனுபவங்கள் சிலருக்கு இனிப்பாக அமைந்தால்,, சிலரும் கசப்பாக அமையும். பொதுவாக திருமணத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயமுமே மிகவும் முக்கியத்துவம் பெறும்.
பல கனவுகளும், ஆசைகளும் சுமந்து அடியெடுத்து வைக்கும் இந்த திருமண நாளில் நடைபெறும் சம்பவங்களில் சில வினோதமானதாக இருந்தால், பல சுவாரஸ்யமானதாக இருந்து, அனைவரின் கவன ஈர்ப்பை பெற்றுவிடுகிறது. பொதுவாகவே, திருமணத்தில் நடக்கும் விசயங்கள் பசுமரத்தாணி போல மனதில் தங்கிவிடும். அது நல்லதா இல்லை துன்பத்தைத் தரக்கூடியதா என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும்.
மேலும் படிக்க | மணமேடையில் லிப் லாக் கொடுத்த மணப்பெண்! வேதனையில் 90's கிட்ஸ்!
அப்படி ஒரு வித்தியாசமான சம்பவத்தில் திருமண நிகழ்ச்சியில், மணமகள் செய்த செயல், இணையத்தில் வைரலாகிறது, அந்த காட்சி இணையத்தில் பகிரப்பட்டு அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகிறது.
திருமணத்தில், மாலை மாற்றும் சமயத்தில் மணமகளை தோளில் தூக்கியவரையே மணப்பெண் கலாய்த்தால் எப்படி இருக்கும். திருமணப் பெண் வேண்டுமென்றே இதை செய்யவில்லை. பயத்தினால் தான் செய்தார் என்றாலும், முகம் சுளிக்கும் ஆணின் ரியாக்சன் வேறாகத் தானே இருக்கும்?
வைரலாகும் இந்த வீடியோவில், மணமேடையில் மாலை மாற்றும் சடங்கு நடைபெறுகிறது. மாலை மாற்ற கழுத்தைக் கொடுக்காமல், மணமகனை சிலர் தூக்க, மணமகளையும் சிலர் தூக்குகின்றனர்.
மேலும் படிக்க | கலிகாலம் முத்தி போச்சு! திருமணத்தில் காதலனை இறுக்க அணைச்சு உம்மா கொடுத்த மணப்பெண்!
பொதுவாக இந்த நிகழ்ச்சியில், நெருங்கிய உறவினர்களே மணமக்களை தோளில் தூக்குவார்கள். பெண்ணை தூக்கும்போது, கல்யாணப் பெண்ணின் பேலன்ஸ் தவறுகிறது. அங்கு தான் இந்த ’குடுமிப்பிடி’ விஷயம் நடந்தது...
திருமணத்தில் தாலை கட்டி முடித்தவுடன் மாலை மாற்றும்போது, மணப்பெண் தனனி தூக்கி தோள் கொடுத்தவரின் தலையைப் பிடிக்க, அவரது போலி தலைமுடி ‘விக்’ கையுடன் வருகிறது. வீடியோவைப் பார்த்த அனைவருக்கும், ‘தலைமுடி இழந்தவர்’ முகத்தின் ரியாக்ஷனைப் பார்த்தால் சிரிப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை.
மேலும் படிக்க | என்ன தைரியம் இருந்தா ‘இப்படி’ ஒரு வீடியோவை போடுவீங்க? கடுப்பாகும் நெட்டிசன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ