ஓடும் ரயிலில் ஓயாமல் ஆடிய பெண்.. வெச்சி செஞ்ச நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ

Viral Video: வீடியோவில், ஓடும் ரயிலில் இரண்டு பெண்கள் நடனமாடுவதைக் காண முடிகின்றது. பெண்கள் ஆடும் நடனம் அபாரமாக உள்ளது என்றாலும், ஓடும் .ரயில் அதற்கான இடம் அல்ல என்பதுதான் உண்மை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 1, 2023, 05:14 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் jayajerry8572 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ் கிடைத்துள்ளன.
  • அதே சமயம், பலர் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
ஓடும் ரயிலில் ஓயாமல் ஆடிய பெண்.. வெச்சி செஞ்ச நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. 

நடன வீடியோக்களுக்கு இணையத்தில் ஒரு தனி மவுசு உள்ளது. பலர் தங்களது அற்புதமான நடனங்களை இணையத்தில் போஸ்ட் செய்வது உண்டு. சிலர் பிறர் ஆடும் நடனத்தை ரெகார்ட் செய்து பகிர்கிறார்கள். பொது இடங்களில் நடனமாடுவது இந்த நாட்களில் பொதுவானதாகிவிட்டது. சமூக வலைதளங்களில் வைரலாவதற்கு மக்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராகிவிட்டனர். யாருக்கும் எந்த வித இடையூறும் இல்லாதவரை எதுவும் பிரச்சனை இல்லை. ஆனால், பொது இடங்களில் பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் இவை நடந்தால், அது தவறு. 

உதாரணமாக, மருத்துவமனைகள், வாகன நெரிசல் நிறைந்த சாலைகள் ஆகிய இடங்களில் தங்களது திறமையை காட்டி இணையத்தில் வைரலாக சிலர் சில வீடியோகளை எடுக்கும்போது அது பலருக்கு பல வித சங்கடங்களை அளிக்கின்றது.

இதில் ரயில்களும் அடங்கும். இரவு நேர பயணம் செல்லும் பலர் நாள் முழுதும் பணி செய்த களைப்பில் ரயிலில் நிம்மதியாக தூங்க எண்னி ரயில் ஏறுவார்கள். ஆனால், இன்றைய நாட்களில் இரவில் வீடியோ எடுத்து பயணிகளை பாடாய் படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அப்படி ஒரு வீடியோ சமீபத்திலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவில், ஓடும் ரயிலில் இரண்டு பெண்கள் நடனமாடுவதைக் காண முடிகின்றது. பெண்கள் ஆடும் நடனம் அபாரமாக உள்ளது என்றாலும், ஓடும் ரயில் அதற்கான இடம் அல்ல என்பதுதான் உண்மை. இணையவாசிகளுக்கு இந்த பெண்கள் செய்வது பிடிக்கவில்லை. மேலும் சமூக வலைதளங்களில் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: தோகை விரித்து ஆடி காதலியை கவர போராடும் ஆண் மயில்... மசியாத பெண் மயில்!

வைரலாகி வரும் இந்த வீடியோவில், போஜ்புரி பாடலில் இரண்டு பெண்கள் நடனமாடுவதைக் காண முடிகின்றது. ரயிலில் உள்ள மற்ற பயணிகளுக்கு இதனால் எவ்வளவு தொந்தரவு ஏற்பட்டிருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, இணையவாசிகள் கடும் கோபத்தில் உள்ளனர். 

ஓடும் ரயிலில் நடனமாடிய பெண்களின் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jaya Jerry (@jayajerry8572)

இணையத்தில் வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் jayajerry8572 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ் கிடைத்துள்ளன. அதே சமயம், பலர் இதை ஷேர் செய்து வருகின்றனர். இந்த வீடியோ குறித்து மக்கள் பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். வைரலாகும் இந்த வீடியோவில் பெண்கள் செய்யும் செயலுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 'இது போன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்' என ஒரு பயனர் எழுதியுள்ளார். மற்றொரு பயனர், 'இணையத்தில் வைரலாகும் இந்த நோய் வேகமாக பரவுகிறது' என்று எழுதியுள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ப்ரெண்ட்ஸ் 2.0...படமே எடுக்கலாம் போல இருக்கே!! வாய் பிளக்க வைத்த நட்பு... வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News