இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் 2_வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. இந்திய கேப்டன் விராத் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
Captain @imVkohli wins the toss. Elects to bat first in the 2nd @Paytm ODI #INDvAUS pic.twitter.com/xnTXMnuQCN
— BCCI (@BCCI) September 21, 2017
ஏற்கனவே சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
2_வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணி இன்று களம் இறங்கக்கூடும்.
கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் இந்தியா இதுவரை 20 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. அதில் 11-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. மேலும் இந்த ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் விளையாடி உள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்று உள்ளது.
இன்றைய போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும். மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருவதால், இன்று நடைபெறும் போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இந்தியா அணி வீரர்கள்: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ரஹானே, லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, டோனி (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ்யாதவ், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், டிரெவிஸ் ஹெட், ஹில்டன் கார்ட்ரைட், ஆரோன் பின்ச், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், ஆடம் ஸம்பா, ஆஷ்டன் அகர், நாதன் கவுல்டர் நைல், பேட் கம்மின்ஸ், ஜேம்ஸ் பாக்னர், கேன் ரிச்சர்ட்சன்.