ஐபிஎல் 2017: டெல்லி - ஐதராபாத் இன்று மோதல்

Last Updated : May 2, 2017, 02:33 PM IST
ஐபிஎல் 2017: டெல்லி - ஐதராபாத் இன்று மோதல் title=

10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 10 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்வியுடன் (பெங்களூருவுக்கு எதிரான லீக் ஆட்டம் முடிவு இல்லாமல் போனது) 13 புள்ளிகள் பெற்றுள்ளது.

கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி கொல்கத்தா அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

டெல்லி அணி தனது கடைசி 5 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நடப்பு சாம்பியன் ஐதராபாத் அணி 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணியுடன் மோதுகிறது.

Trending News