கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெலாந்துறை கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் ஓடு போட்ட வீட்டில் வசித்து வருபவர் செல்வம் - கலைச்செல்வி தம்பதியினர். விவசாய கூலியை செய்யும் இவர்களுக்கு 9 வயதில் காவியா என்ற மகளும், இரண்டு வயதில் ரியா என்ற மகளும் உள்ளனர்.
முதல் மகளான காவியா அதே கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சுறுசுறுப்பாக செயல்படும் காவியா, நினைவுத்திறன் (Memory Power) அதிக அளவில் இருப்பதைக் கண்ட அவர்களது பெற்றோர்கள், எடுத்த ஒரு முயற்சி அவளது அறிவுத் திறனை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
கிராமத்தின் பெருமைக்காகவும், பிள்ளையின் ஊக்கத்தை ஊக்குவிக்கும் விதத்திலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, உலகில் உள்ள 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் கொடிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகத்தை வாங்கி கொடுத்துள்ளனர். முதலில் புத்தகத்தைப் படிக்க துவங்கிய காவியா, நாளடைவில் ஆர்வம் அதிகரித்து, 195 நாடுகளின் பெயர்களையும், அந்நாட்டுடைய கொடிகள் பற்றியும் படித்து தெரிந்து கொண்டார்.
மேலும் படிக்க | புதிய தேசிய கல்வி கொள்ளை தான் எதிர்காலம் - கவர்னர் ஆர்என் ரவி
காவ்யாவின் ஆர்வத்தை பார்த்த அவளது பெற்றோர்கள், மகளின் திறமையை சோதிக்கும் வகையில், 195 நாட்டுக் கொடிகளையும், தனியாக பிரிண்ட் செய்து, ஒவ்வொன்றாக காண்பித்துள்ளனர். அப்போது அனைத்து நாட்டு கொடிகளையும் தெள்ளத் தெளிவாக மகள் காவியா கூறுவதை அறிந்து மிகவும் பெருமை அடைந்தனர்.
மேலும் உலக சாதனை பெறவேண்டும் என்ற நோக்கத்தில், தீவிரப் பயிற்சி மேற்கொண்ட காவியா, எந்த நாட்டு கொடியை, காண்பித்தாலும் உடனடியாக அந்த நாட்டின் பெயரை கூறுவதும், ஒரு நாட்டின் பெயரை கூறினால், அந்த நாட்டு கொடியை எடுத்து காண்பித்தும் தனது அசாதாரண திறமையை காண்பிப்பதைக் கண்டு கிராம மக்களே வியப்படைந்தனர்.
மேலும் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 195 நாடுகள் பற்றியும் மாணவி, மூன்று மாதத்தில் அனைத்தையும் கற்றுக்கொண்டு, அதிக நினைவுத்திறன் கொண்ட மாணவியாக திகழ்வது எங்கள் கிராமத்திற்கும் எங்களுக்கும் பெருமையாக உள்ளது என அவரது பெற்றோர்கள் பூரிப்பு அடைந்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவது தவறே இல்லை - திருமா போடும் திடீர் குண்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ