தற்போது சென்னை வானிலை மையம் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியது,
ஓகி புயல் வடமேற்கு திசை நோக்கி லட்சத்தீவு கடந்து செல்லும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மாவட்டங்களில் மிக மிக கன மழை பெய்யக் கூடும். டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு. மீனவர்களுக்கான எச்சரிக்கை பொருத்த வரை கன்னியாக்குமரி, தூத்துக்குடி, நெல்லை, இராமனாதபுரம் உட்பட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 65 கி.மீ முதல் 75 கி.மீ வேகத்தில் காற்று வீசும். கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிறுத்தினார்.
— TN SDMA (@tnsdma) November 30, 2017
தமிழ்நாடு வெதர்மேன் வலைப்பக்கத்தில் கன்னியாகுமரி அருகே ஓகி புயல் உருவாகியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
புயல் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்றும் கூறப்படுகிறது.
கனமழை எதிரொலி காரணமாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்குள் அதிதீவிர புயலாகி மணிக்கு 130 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
BREAKING: 1st Cyclone of #NEM2017 arrives.. Cyclone #Ockhi is all set to batter Southern TN and #SriLanka starting today..#Chennai and Northern TN also will get heavy rains from time to time in the next 2 to 3 days.. pic.twitter.com/4pjvXT3m3o
— Ramesh Bala (@rameshlaus) November 30, 2017
#ChennaiRains #Tamilnadurains #tamilnadu #Chenna Current system location and predicted track by JWTC..The cone kind of shape is called as "Cone of uncertainity" which means within that cone shape cyclone can move in any track as predicted.. #Ockhi pic.twitter.com/ibYMIyZJjd
— ChennaiWeather (@Chennai_Rains) November 29, 2017
JUST IN: Take a look at the #Rainfall in the last 24 hours from 8:30 am across #Chennai #DeepDepression #Cyclone #Ockhi #CycloneOckhi #Chennairains #Weather #cyclone1 #cyclonealert #Chennaiweatherupdate pic.twitter.com/NjvAWhllUt
— SkymetWeather (@SkymetWeather) November 30, 2017