வேலூரை மிரள வைத்த இளைஞர் கொலை..! நடந்தது என்ன?

லத்தேரி அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வேலூர் எஸ்பி மணிவண்ணன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.   

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Sep 12, 2023, 12:59 PM IST
  • வேலூரில் இளைஞர் கொலை
  • கொலையாளிகளுக்கு வலைவீச்சு
  • அடுத்தடுத்து 2வது கொலையால் பதற்றம்
வேலூரை மிரள வைத்த இளைஞர் கொலை..! நடந்தது என்ன? title=

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி கோரப்பட்டரை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரின் ஒரே மகனான 24 வயதாகும் குணசேகரன் ஐடிஐ படித்துவிட்டு வெல்டிங் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு வீட்டை விட்டு சென்ற அவர் காலை வரை வீட்டுக்கு வரவில்லை. அவருடைய தாயார் ராஜலட்சுமி பல்வேறு இடங்களில் தேடியும் குணசேகரன் பற்றி எந்த வித  தகவலும் கிடைக்கவில்லை.  

மேலும் படிக்க | உதயநிதி தலைக்கு விலை... அவர் போலி சாமியாராக தான் இருக்க வேண்டும் - அண்ணாமலை அதிரடி!

இந்த சூழலில் அதே பகுதியில் உள்ள மளிகை கடை வைத்திருக்கும் சதீஷ் என்பவர் அவரது கடைக்கு பின்புறம் உள்ள மணல் மேட்டில் சடலம் ஒன்று கிடப்பதாக லத்தேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி டிஎஸ்பி பழனி, லத்தேரி காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து கிடப்பது குணசேகரன் என்பது தெரிய வந்தது. அவரை யாரோ தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். 

மேலும் குணசேகரனின் இருசக்கர வாகனமும் அருகிலேயே இருந்துள்ளது. இது குறித்து லத்தேரி போலீசார் சடலம் கிடைத்த இடத்தின் அருகே வசித்து வந்தவர்களிடம்  விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணனும் இந்த கொலை சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டார். மேலும் மோப்பநாய் சாரா வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு புலன் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சம்பவம் நடந்த அன்று குணசேகரனுடன் சிலர் மது அருந்தியதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை வைத்து அவருடன் சேர்ந்து மது அருந்தியவர்கள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு லத்தேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பால் வியாபாரி நாகேஷ் கொடூரமாக கொல்லப்பட்டு அந்த கொலைக்கான தடையம் இதுவரை கிடைக்காத நிலையில் தற்போது அந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மேலும் ஒரு கொலை அப்பகுதியில் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை:முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News