Whatsapp Tips And Tricks: லாப்டாப்பில் இருந்து வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு செய்வது சுலபம்

வாட்ஸ்அப் நிறுவனம் தனது டெஸ்க்டாப் செயலியில் வீடியோ மூலம் அழைக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 6, 2021, 11:47 PM IST
  • லாப்டாப்பில் இருந்து வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு செய்வது சுலபம்
  • கணினியில் இருந்தும் வாட்ஸ்அப் வீடியோ கால் செய்யலாம்
  • வாட்ஸ்அப் வீடியோ கால் கொரோனா காலத்தில் மிகவும் பிரபலமானது
Whatsapp Tips And Tricks: லாப்டாப்பில் இருந்து வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு செய்வது சுலபம் title=

வாட்ஸ்அப் மூலம் தொலைபேசி அழைப்பை செய்வது எவ்வளவு சுலபமானதோ, அவ்வளவு எளிமையானது தான்,  வாட்ஸ்அப் வீடியோ அழைப்பை மடிக்கணினியிலிருந்து செய்வதும் என்பது பலருக்கு தெரியாது. மிகவும் சுலபமான வாட்ஸ்அப் வீடியோ அழைப்பை லாப்டாப்பில் இருந்து செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம்.

வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு பலராலும் மிகவும் விரும்பப்படுகிறது. வாட்ஸ்அப்பில் அதிகம் பயன்படுத்தப்படும் அம்சங்களில் ஒன்று அழைப்பு வசதி. கொரோனா காரணமாக இந்த வசதி மேலும் பிரபலமடைந்துவிட்டது. வீடியோ மூலம் நமக்கு நெருங்கியவர்களை செலவே இல்லாமல் பார்த்து பேச முடிகிறது. தற்போது, வாட்ஸ்அப் நிறுவனம் தனது டெஸ்க்டாப் செயலியில் வீடியோ மூலம் அழைக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்போது வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி பயனர்கள் தங்கள் லேப்டாப் அல்லது கணினி மூலம் வீடியோ அழைப்புகளைச் செய்வதற்கும் பதிலளிப்பதற்கும் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம். ஆனால் வாட்ஸ்அப் வலை பயனாளர்கள் இன்னும் வீடியோ அழைப்பு வசதியை பெறவில்லை. நீங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் மூலம் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பை மேற்கொள்ள விரும்பினால், இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

Also Read | ரயில் பயணத்தின் போது உங்கள் ரயில் டிக்கெட்டை யாரெல்லாம் செக் பண்ண முடியாது

மடிக்கணினி அல்லது கணினியில் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பை எவ்வாறு செய்வது?
முதலில், உங்கள் லேப்டாப் அல்லது விண்டோஸ் அல்லது மேகோஸ் இயங்கும் கணினியில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இதைச் செய்ய, செயலியை பதிவிறக்கி உங்கள் லேப்டாப் அல்லது கணினியில் நிறுவவும்.  பயனர்பெயர் மற்றும் தொலைபேசி எண் போன்ற உங்கள் சான்றுகளுடன் உள்நுழையவும்.

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் விண்டோஸ் 10 64-பிட் பதிப்பு 1903 அல்லது புதிய மற்றும் மேகோஸ் 10.13 அல்லது புதியவற்றில் மட்டுமே வீடியோ அழைப்புகளை செய்ய முடியும். குழு வீடியோ அழைப்பு திறனை ஆதரிக்கும் பயன்பாட்டின் மொபைல் பதிப்பைப் போலல்லாமல் இதில் இருவர் மட்டுமே கலந்துக் கொள்ளும் வீடியோ அழைப்பை மட்டுமே செய்ய முடியும்.

Also Read | டைப் செய்யாமலேயே வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவது எப்படி?

கணினியில் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பை எப்படி செய்வது
1. மேலே குறிப்பிட்டபடி விண்டோஸ் அல்லது மேக்கிற்கு வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலியை நிறுவவும்.
2. உங்கள் தொலைபேசியிலிருந்து கணினியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
3. டெஸ்க்டாப்பில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு திறந்தவுடன், சேட்டிங் என்ற தெரிவைத் திறந்து மேல் வலது மூலையில் உள்ள வீடியோ கால் ஐகானைக் கிளிக் செய்யவும்.
4. உங்கள் தொடர்பில் உள்ள நண்பர் ஒருவரிடம் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பை செய்ய உங்கள் கணினி இப்போது தயாராகிவிட்டது.
கணினியில் WhatsApp வீடியோ அழைப்புகளைச் செய்ய சில குறைந்தபட்ச வசதிகள் தேவை. இவற்றில் ஆடியோ வெளியீட்டு சாதனம், மைக்ரோஃபோன், வெளிப்புற அல்லது உள்ளமைக்கப்பட்ட வெப்கேம் மற்றும் இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

Also Read | Govt Vacancies Available: அரசு வேலை வேண்டுமா? உங்களுக்கு ஏற்ற வேலை இதுவா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News