தனது வாடிக்கையாளர்களை உடனடியாக ஆண்ட்ராய்டு செயலியை அப்டேட் செய்யுமாறு டிவிட்டர் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
டிவிட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் செலுத்தப்பட்டுவிட்டதாக டிவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த குறியீடுகள் உலகம் முழுக்க டிவிட்டர் ஆண்ட்ராய்டு செயலியை பயன்படுத்துவோரின் விவரங்களை கசியவிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த பிழை டிவிட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் உள்ள பிழை ஒருவரது அக்கவுண்ட் விவரங்கள் மற்றும் அக்கவுண்ட்டினை ஹேக்கர்கள் இயக்க வழி செய்யும் என டிவிட்டர் தெரிவித்துள்ளது. இந்த பிழை எவ்வாறு செயலியில் புகுத்தப்பட்டது என்றோ, இதன் மூலம் எத்தனை வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது போன்று எவ்வித தகவலையும் வழங்கவில்லை.
தற்போது இந்த பிழையை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக டிவிட்டர் தெரிவித்துள்ளது. அந்தவகையில் பிழையில் இருந்து தப்பிக்க வாடிக்கையாளர்கள் தங்களின் டிவிட்டர் ஆண்ட்ராய்டு செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என டிவிட்டர் நிறுவனம் வலியுறுத்தி இருக்கிறது.