கொரோனா வைரஸ் தாக்கு: சீனாவில் இறப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

Last Updated : Jan 26, 2020, 12:42 PM IST

Trending Photos

கொரோனா வைரஸ் தாக்கு: சீனாவில் இறப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்வு! title=

சீனாவில் கொடிய கொரோனா வைரஸ் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை வரை 56 ஆக உயர்ந்துள்ளது!!

சீனாவில், 'கொரோனா வைரஸ்' பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 56 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2,000 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானோரில், 237 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சீனாவில், 2003 ஆம் ஆண்டு, -'சார்ஸ்' எனப்படும் வைரஸ் பரவியதில், 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த வைரசால், 8,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், அங்கு, தற்போது, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக பரவி வரும் இந்த வைரசால், 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலியானோர் அனைவரும் 55 வயது முதல் 87 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.  அவர்களில் 11 பேர் ஆண்கள்.  4 பேர் பெண்கள்.  சீனா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 1,300 பேர் பாதிப்படைந்து உள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 13 பேர் பலியான நிலையில், பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது என உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதேபோன்று 323 பேர் கூடுதலாக பாதிப்பு அடைந்து உள்ளனர் என பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய கொரோனா வைரஸ் 1,287 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

உலகெங்கிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் ஒரு தொற்றுநோயைத் தடுப்பதற்காக, சீனா ஒரு "மோசமான சூழ்நிலையை" எதிர்கொள்கிறது என்று ஜனாதிபதி ஜி ஜின்பிங் சனிக்கிழமை ஒரு பொலிட்பீரோ கூட்டத்தில் கூறினார்.

சட்டவிரோதமாக வனவிலங்குகளை விற்பனை செய்து வந்த மத்திய சீன நகரமான வுஹானில் உள்ள கடல் உணவு சந்தையில் கடந்த ஆண்டு பிற்பகுதியில் தோன்றியதாக நம்பப்படும் இந்த வைரஸ், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட சீன நகரங்களுக்கும், அமெரிக்கா, தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் கனடாஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. 

 

Trending News