7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு சமீபத்திய புதுப்பிப்பு: அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு இன்று ஒரு பெரிய செய்தியை அளிக்கக்கூடும். இன்று பெரிய அறிவிப்பு வெளியாகலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒரு முக்கியமான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் அரசாங்கம் அகவிலைப்படி உயர்வு விவகாரத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். டிஏ உயர்வு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட பிறகு, அகவிலைப்படி உயர்வு குறித்த பெரிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. முதலாவது ஜனவரி முதல் ஜூன் வரை வழங்கப்படுகிறது. இரண்டாவது ஜூலை முதல் டிசம்பர் வரை வழங்கப்படுகிறது. டிஏ 4 சதவீதம் அதிகரித்து மொத்த டிஏ 38 சதவீதம் ஆக உயர்த்தப்படலாம் என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. இந்த பிரகாசமான நம்பிக்கையின் பின்னணியில் மே மாதத்திற்கான சமீபத்திய அகில இந்திய சிபிஐ-ஐடபிள்யு தரவு உள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, அகவிலைப்படியில் பம்பர் அதிகரிப்பு
மே மாதத்திற்கான அகவிலைப்படியை நிர்ணயிப்பதில் முக்கியமான காரணியான ஏஐசிபிஐ இன்டெக்ஸ், மத்திய அரசின் அகவிலைப்படி அதிகரிப்பதற்கான நிகழ்தகவை சுட்டிக்காட்டுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு இன்னும் சில நல்ல செய்திகளைக் கொண்டு வரலாம். இப்போது, சமீபத்திய ஊடக அறிக்கைகளின் படி, ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயரக்கூடும். அதாவது மொத்த அகவிலைப்படி 38 சதவீதத்தை எட்டக்கூடும்.
ஏப்ரல், 2022க்கான அகில இந்திய சிபிஐ-ஐடபிள்யூ 1.7 புள்ளிகள் அதிகரித்து 127.7 ஆக இருந்தது. 1-மாத சதவீத மாற்றத்தில், இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 1.35 சதவீதம் அதிகரித்துள்ளது. சமீபத்திய அமைச்சக அறிக்கைகளின்படி, மே மாதத்திற்கான ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் 129 ஆக உள்ளது. இது, அகவிலைப்படி எதிர்பார்ப்பை விட அதிகமாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. அதாவது 6 சதவீத அதிகரிப்பு கூட இருக்கலாம் என்று பல ஊடக இணையதளங்கள் கூறுகின்றன.
2022 ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படியின் முதல் அதிகரிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 2021 இல், ஏஐசிபிஐ எண்ணிக்கை 125.4 ஆக இருந்தது. ஆனால், 2022 ஜனவரியில் 0.3 புள்ளிகள் குறைந்து 125.1 ஆக சரிந்தது. பிப்ரவரி, 2022க்கான அகில இந்திய சிபிஐ-ஐடபிள்யூ 0.1 புள்ளிகள் குறைந்து 125.0 ஆக இருந்தது. 1-மாத சதவீத மாற்றத்தில், இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 0.08 சதவீதம் குறைந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே மாதங்களுக்கு இடையில் பதிவு செய்யப்பட்ட 0.68 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் காணப்படும் தரவாகும். மார்ச் மாதத்தில், 1 புள்ளி ஏற்றம் காணப்பட்டது. மார்ச் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் 126 ஆக உள்ளது.
1.16 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில், விலைவாசி உயர்வை ஈடுகட்ட, மத்திய அமைச்சரவை மார்ச் 30ஆம் தேதி அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணத்தை (டிஆர்) 3 சதவீதம் அதிகரித்து 34 சதவீதம் வரை உயர்த்தியது நினைவிருக்கலாம்.
கூடுதல் தவணை ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வருகிறது. 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரத்தின்படி அதிகரிப்பு உள்ளது.
மேலும் படிக்க | 8th Pay Commission: அடித்தது ஜாக்பார்ட்! இரட்டை ஊதியம் மற்றும் சம்பள உயர்வு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ