இனி ஜியோ சினிமா இலவசம் இல்லை! 1 மாதத்திற்கு பிரிமியம் தொகை எவ்வளவு தெரியுமா?

Jio Cinema: பயனர்களுக்கு இலவசமாக தன் சேவைகளை வழங்கி வந்த ஜியோசினிமா தற்போது சந்தாக்களை அறிமுகப்படுத்தி உள்ளது. தனிநபர் மற்றும் குடும்பம் என இரண்டு திட்டங்களை வைத்துள்ளது.
1 /6

ஐபிஎல் போட்டியின் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியவுடன் JioCinema ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. மொபைல்போன்கள், டேப்லெட், லேப்டாப், டிவி என அனைத்திலும் இந்த சேவையை பெற முடியும்.    

2 /6

JioCinema ஆரம்பித்ததில் இருந்து இலவசமாக இருந்து வந்த அதன் சேவைகளை தற்போது பிரீமியம் வடிவில் மாற்றி உள்ளது. உங்களின் தேவைகளுக்கு ஏற்ப அதன் ரீசார்ஜ் திட்டங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.  

3 /6

Prime Video மற்றும் Netflix போல சந்தா தொகைக்கு ஏற்றார் போல வீடியோ தெளிவுத்திறனை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்காமல் அனைவருக்கும் ஒரே போல வீடியோக்களை JioCinema வழங்குகிறது.  

4 /6

எவ்வளவு தொகையில் நீங்கள் பிரீமியம் சந்தா பெற்று இருந்தாலும் 4K தரத்தில் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கலாம். சமீபத்தில் பல்வேறு ஹாலிவுட் படங்களை JioCinema தனது தளத்தில் பதிவிட்டுள்ளது.   

5 /6

ஒருவர் மட்டும் பயன்படுத்த கூடிய ஜியோசினிமா சந்தாவின் விலை ஒரு மாதத்திற்கு ரூ. 29 ஆகும். நீங்கள் பல சாதனங்களில் பயன்படுத்த வேண்டும் என்றால் மாதம் ரூ. 89 செலுத்த வேண்டும். அதிகபட்சம் 4 சாதனங்களில் பயன்படுத்தி கொள்ளலாம்.  

6 /6

ஜியோசினிமா பிரீமியத்திற்கு கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் அல்லது UPI மூலம் பணம் செலுத்தலாம். மேலும் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் இருவரும் ஆட்டோமெட்டிக் பேமெண்ட் மோடையும் செட் செய்து கொள்ளலாம்.