நைட் ஷிஃப்ட் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் 7 பிரச்சனைகள்!!

Side Effects Of Working In A Night Shift : நம்மில் பலர், இரவு நேரத்தில் வேலை பார்த்து வருவோம். இதனால், உடலிலும் மனதிலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

Side Effects Of Working In A Night Shift : சாதாரணமாக பகல் நேரத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை அமர்ந்து வேலை செய்வதாலேயே நமக்கு உடலில் பல பிரச்சனைகள் வருகிறது. இதில், இரவு நேரத்தில் வேலை செய்தால் என்ன ஆகும் தெரியுமா? இரவு ஷிஃப்டில் வேலை செய்பவர்களுக்கு உடலில் மட்டுமன்றி மனதிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றனவாம். அவை குறித்து இங்கு பார்ப்போம். 

1 /7

இரவு நேரத்தில் வேலை செய்பவர்களுக்கு சர்காடியன் ரிதம் எதிர்திசையில் சுற்றுகிறது. இதனால், தூக்கமின்மை, குறைவான தூக்கம், படுத்தவுடன் உறங்குவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம். 

2 /7

இரவில் வேலை செய்பவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், இரைப்பை குடல் பிரச்சினைகள் ஆகியவை வர அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

3 /7

இரவில் வேலை பார்ப்பவர்களுக்கு பதற்றம், மன அழுத்தம், மனக்குழப்பம் ஆகியவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாம். 

4 /7

குறைவான தூக்கம் இருப்பதால், இரவில் வேலை பார்ப்பவர்களின் நோயெதிப்பு திறன் குறையலாம். 

5 /7

இரவு ஷிஃப்ட் பார்ப்பவர்களுக்கு நினைவுத்திறன் இழப்பது, முடிவெடுக்கும் திறன் குறைவது போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். 

6 /7

சரியான தூக்கம் இல்லாததால், வேலையில் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் அதிக தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதாம். 

7 /7

இரவு நேரத்தில் வேலை பார்ப்பது, குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தலாம். குறிப்பாக, திருமணமானவர்கள் வாழ்வில் இது பெரும் மாறுதலை உண்டாக்கும். ஒரு வித தனிமை உணர்வையும் அளிக்குமாம்.