SIP Investment: டீ காசை மிச்சம் பிடித்தாலே போதும்... ஓய்வு பெறும் போது ரூ.10 கோடி கையில் இருக்கும்

SIP Investment: பரஸ்பர நிதியம் என்னும் ம்யுச்சுவல் ஃபண்ட் பற்றி, பலருக்கும் தெரிந்திருக்கும். இதில் முதலீடு செய்தால், பணத்தை எளிதில் பன்மடங்காக்கலாம். திட்டமிட்டு நீண்ட காலத்திற்கு தொடர் முதலீடு செய்தால், கோடிகளில் பணம் சேர்க்கலாம்.

 

வங்கிகளில் செய்யப்படும் வழக்கமான RD முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட, பரஸ்பர நிதியம் வருமானத்தை அள்ளிக் கொடுக்கிறது என்பதால், பலரும் இதனை பயன்படுத்தி, தங்கள் பணக்காரர் ஆகும் கனவை நிறைவேற்றி வருகிறார்கள்.

1 /8

Systematic Investment Plan: முதலீடு முதலீடுகளை திட்டமிட்டு செய்வதில் தான் பணத்தை பன்மடக்காக்கும் ஃபார்முலா நிறைந்துள்ளது. அதற்காக நீங்கள் ஆயிரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதில்லை. நாளொன்றுக்கு டீக்கு செலவிடும் காசை மிச்சம் பிடித்தாலே எளிதில் பணக்காரர் ஆகலாம்.

2 /8

மாத சேமிப்பு: இன்றைய விலைவாசியில் வாங்க வேண்டும் என்றால், நான் ஒன்றுக்கு பத்து ரூபாய் செலவழிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு டீக்கு 20 ரூபாய் செலவிடுவீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதனை மிச்சம் பிடித்தாலே, உங்கள் கையில் ஒரு கோடி இருக்கும்.

3 /8

மாத முதலீடு: நாள் ஒன்றுக்கு இருபது ரூபாய் என்றால், மாதம் ஒன்றுக்கு 600 ரூபாய் நீங்கள் சேமிக்கலாம். இதன் மூலம், மாதம் தோறும் எஸ்ஐபி என்னும் பரஸ்பர நிதிய முதலீட்டில், நிதி ஆலோசகரின் ஆலோசனைப்படி, அதிக வருமானத்தை கொடுக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்து வந்தால், ஓய்வு பெறும்போது உங்கள் கையில் ரூ.10 கோடி இருக்கும்.  

4 /8

பரஸ்பர நிதிய வருமானம்: பரஸ்பர நிதியத்தில் சராசரியாக 12 முதல் 15 சதவீத ஆண்டு வருமானம் கிடைக்கும் என்று, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சில பரஸ்பர நிதியங்கள் 20 சதவீதம் என்ற அளவில் கூட வருமானத்தை கொடுக்கின்றன என்பதை சமீத்திய தரவுகள் நிரூபித்துள்ளன.  

5 /8

கூட்டு வட்டியின் பலன்: SIP முதலீடுகளில் கிடைக்கும் வருமானத்தை, சராசரி அளவான 15 சதவீத வருமானம், என்று எடுத்துக் கொண்டாலே, மாதம் ரூபாய் 600 சேமிக்கும் போது, கோடிகள் பணம் பெருகுகிறது. அதற்கு காரணம், இதில் கிடைக்கும் கூட்டு வட்டி வருமானம். அதாவது முதல் ஆண்டின், ரிட்டன் மற்றும் முதலீடு இரண்டிற்கும் சேர்த்து, அதற்கு அடுத்த ஆண்டில் ரிட்டர்ன் கிடைக்கிறது  

6 /8

20 வருட தொடர் முதலீடு: 20 வயதில், ஒரு நாளைக்கு 20 ரூபாயைச் சேமித்து மாதம் 600 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டுகளில் டெபாசிட் செய்வதன் மூலம் பெரும் பணத்தை சேமிக்கலாம். இதில் மாதம் தோறும் 10 சதவிகிதம் என்ற அளவில் முதலீட்டை அதிகரித்தால், ரூ. 10 கோடி கார்பஸை உருவாக்க முடியும். 

7 /8

30 வருட தொடர் முதலீடு: 30 வயதில் தினமும் 30 ரூபாய் சேமித்தால், மாதம் 900 ரூபாய் முதலீடு செய்யலாம். இந்தத் தொகையை SIP மூலம் 30 ஆண்டுகளுக்கு 10 சதவீதம் என்ற அளவில் முதலீட்டை அதிகரித்தால் சுமார் ரூ.10 கோடி உங்கள் கையில் இருக்கும்.  

8 /8

முக்கிய குறிப்பு: பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. SIP என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாக இருப்பதால், அதன் வருமானமும் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.