Tamil Nadu Latest News: சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஆர்எஸ்வி எனப்படும் நுரையீரலை பாதிக்கும் தொற்று பரவி வருகிறது என கூறப்படும் நிலையில், அதன் பாதிப்புகள் குறித்தும், அதில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்தும் இங்கு காணலாம்.
Respiratory syncytial virus என்ற ஆர்எஸ்வி தொற்று குறித்து சென்னையை சேர்ந்த சுரேஷ் சகாதேவன் விரிவாக விளக்கம் அளித்துள்ளார். அந்த தொற்றின் அறிகுறி, அது பரவும் காலம், அது பரவாமல் பார்த்துக்கொள்வதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவற்றையும் அவர் விரிவாக விளக்கி உள்ளார்.
சமீப காலமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்வி தொற்று (Respiratory syncytial virus) எனப்படும் நுரையீரலை பாதிக்கும் தொற்று பரவி வருகிறது என பொது சுகாதாரத் துறை ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆர்எஸ்வி நுரையீரல் தொற்றில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்வது குறித்தும், அது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் சென்னையை சேர்ந்த நுரையீரல் மருத்துவர் சுரேஷ் சகாதேவன் தகவல் தெரிவித்துள்ளார். அவற்றை இங்கு விரிவாக காணலாம்.
பருவமழை காலங்களில் இதுபோன்ற வைரஸ் தொற்று பரவக் கூடும் என்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை. மேலும், உடல் வலி, தொண்டை வலி, சளியுடன் கூடிய காய்ச்சல் இந்த நோய் தொற்றுக்கு அறிகுறி ஆகும்.
இந்த நோய் தொற்று குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகமாக பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் உள்ளிட்ட பருவமழை காலங்களில் பரவக்கூடிய இந்த ஆர்எஸ்வி தொற்றினால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
பெரும்பாலும் வீட்டில் தயாரித்த உணவுகளை, தயாரிக்கக் கூடிய உணவுகளை உண்ண வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைகளை சோப்பால் கழுவ வேண்டும். தொற்று இருக்கும் என்று தெரிந்தால் முகமுடி அணிந்துகொள்ள வேண்டும்
குணப்படுத்தக்கூடிய தொற்று என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு என சிறப்பான சிகிச்சை என ஒன்றும் கிடையாது, வழக்கமான சிகிச்சைதான். எனவே இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.