6 Habits That Will Change Your Life In 6 Months : நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள நாம் 6 தினசரி நடவடிக்கைகளை வாழ்வில் சேர்த்துக்கொண்டால் போதுமானது. அவை என்னென்ன தெரியுமா?
6 Habits That Will Change Your Life In 6 Months : 48 நாட்கள் ஒரு விஷயத்தை செய்தால் அந்த விஷயம் அப்படியே பழக்கமாக மாறி விடும் என சிலர் கூறுவார்கள். அப்படியிருக்கையில் நாம் 6 மாதத்திற்கு ஒரு விஷயத்தை செய்தால், அது நமது வாழ்க்கையை மேம்படுத்தாதா என்ன? அப்படி, நமது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் சில பழக்கங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
புத்தாண்டு இப்போதுதான் தொடங்கியது போல உள்ளது. ஆனால், விரைவில் இந்த ஜனவரி மாதமே முடிவடைய போகிறது. இந்த ஆண்டில் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலரும், அதை கிட்டத்தட்ட கை விட்டிருப்பர். ஆனால், சில சிம்பிளான பழக்கங்களை 6 மாதம் பின் தொடந்தாலே போதும். நம் வாழ்வே மாறிவிடும். அப்படிப்பட்ட சில பழக்கங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
உங்கள் உறக்கத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள். தினமும் இரவில் 7-9 மணி நேரம் உறங்க முயற்சி செய்ய வேண்டும். உறங்கும் நேரத்தில் செல்போனை தள்ளி வைத்து விட்டு உறங்க வேண்டும். நன்றாக உறங்கினால்தான், உங்களால் அந்த நாளிலும் விழிப்புடன் செயல்பட முடியும்.
தினம் தோறும் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட வகையிலும் உங்களால் வளர்ச்சி பெற முடியும்.
காலை அல்லது மாலையில் 30 நிமிடம் உங்கள் மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் பயிற்சிகளை செய்யுங்கள். ஓட்டப்பயிற்சி, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றை செய்யலாம். இதனால் உடல் வலுவாகி, எண்ண ஓட்டங்களும் மேம்படும்.
அமைதியில் நிம்மதியை தேடுங்கள். தினமும் 10 நிமிடம், அமைதியான சூழலில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்யுங்கள். இது மன அழுத்தத்தை குறைக்கவும், உணர்ச்சி ரீதியாக உங்களை மேம்படுத்தவும் உதவும்.
எதற்கெல்லாம் செலவு செய்ய வேண்டும், எதற்கெல்லாம் செலவு செய்ய கூடாது என பட்ஜெட் போட வேண்டும். இது, உங்கள் தேவையற்ற செலவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு நிதி மேலான்மை தொடர்பான ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கும்.
உங்களது நாளில், நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை திட்டமிட வேண்டும். சரியான இலக்குகளை நிர்ணயித்து அதன்படி நடக்க வேண்டும். இப்படி 6 மாதங்கள் செய்தால், நீங்கள் இப்போது இருக்கும் நிலையை விட உங்கள் வாழ்க்கை இன்னும் அதிகளவில் மேம்பட்டு இருக்கும்.