7th Pay Commission Latest News Updates: 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அகவிலைப்படி, எச்.ஆர்.ஏ மற்றும் பயணப்படி ஆகியவை பற்றிய ஊகங்களுக்கு மத்தியில், அரசாங்கம் அகவிலைப்படியை அளிப்பது மட்டுமல்லாமல், அதிகரித்த விகிதங்களின் அடிப்படையில் பயணப்படி மற்றும் ஹெச்.ஆர்.ஏ-வையும் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
'ஜூலை 1 முதல் 28 சதவீதம் டி.ஏ. கிடைக்கும்'
ஒரு ஊடக அறிக்கையின் படி, அரசாங்கம் இதை தேசிய ஊழியர் அமைப்புகளின் கவுன்சிலிடம் கூறியுள்ளது. செய்தியின் படி, சபைத் தலைவர் ஒருவர் அரசாங்கத்தின் நோக்கத்தைப் பற்றிய கேள்வி எழுப்பியபோது, நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரி, "நீங்கள் ஏன் அரசாங்கத்தை நம்பவில்லை? அரசாங்கத்தை நம்புங்கள், அரசாங்கம் கூறியதை செய்யும். ஜூலை 1 ம் தேதி, 28 சதவீதம் என்ற அதிகரிக்கப்பட்ட அளவுகளில் ஊழியர்களின் கணக்கில் தொகை டெபாசிட் செய்யப்படும்." என்று கூறினார்.
டிஏ தொகையை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை
செய்தித்தாளில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, மத்திய ஊழியர்களின் (Central Government Employees) பல கோரிக்கைகளின் காரணமாக, 2020 ஜனவரி முதல் 2021 ஜூலை வரையிலான டிஏ தொகையை எந்தவித தாமதமும் இன்றி விடுவிக்க வேண்டும் என்று தேசிய 'ஸ்டாஃப் சைட்' கவுன்சில் அரசாங்கத்திற்கு பல முறை கூறியுள்ளது. அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்தின் (AIDEF) பொதுச் செயலாளர், அரசாங்க ஊழியர்கள் கொரோனா காலத்தில் அதிகமான முனைப்புடன் பணிபுரிந்துள்ளார்கள். பல துறைகளில் ஊழியர்கள் 17 மணி நேரத்தைத் தாண்டியும் வேலை செய்கிறார்கள், சிலர் 24 மணி நேரம் வேலை செய்கிறார்கள் என்று கூறினார்.
ALSO READ: 7th Pay Commission: ஜூலை 1 முதல் அரசு ஊழியர்களுக்கு முழுமையான DA, DR சலுகைகள்
நிதி அமைச்சகத்துடன் சந்திப்பு
கடந்த ஆண்டு தொடக்கத்தில், மத்திய அமைச்சரவை அகவிலைப்படியை (DA) நான்கு சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளித்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஊழியர்களின் DA 17 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை டிஏ, டிஆர் மற்றும் பிற கொடுப்பனவுகளை அரசாங்கம் தடை செய்தது. இது குறித்து அரசுக்கு பல கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன என்று சி.ஸ்ரீகுமார் கூறுகிறார். ஊழியர்கள் தரப்புக்கும் நிதி அமைச்சகத்துக்கும் இடையிலான சந்திப்புகளில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது.
DA, HRA, TA அதிகரிக்கும்
சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இப்போது ஊழியர்கள் பொறுமை இழந்து வருவதாக நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. எனவே அவர்களுக்கு உடனடியாக கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. மத்திய அரசு கொடுப்பனவுகளை நிறுத்தியபோது, அந்த நேரத்தில் டிஏ தொகை 17 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது அந்த விகிதம் அதிகரித்துள்ளது. தற்போது ஜூலை 1 முதல் மத்திய ஊழியர்களுக்கு 28 சதவீத வீதத்தில் டி.ஏ. கிடைக்கும் என்று நிதி அமைச்சகத்தின் (Finance Ministry) அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். எச்.ஆர்.ஏ, மற்றும் டி.ஏ ஆகியவை அதிகரித்த கட்டணத்தில் வெளியிடப்படும். எச்.ஆர்.ஏவில் 3 சதவீதம் அதிகரிப்பு பற்றி பேசப்பட்டுள்ளது.
ALSO READ: 7th Pay Commission: இந்த ஊழியர்களின் பதவி உயர்வு பற்றி தெளிவுபடுத்தியது மத்திய அரசு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR