புதுடெல்லி: சந்தையில் இருந்து ₹16,728 கோடி கூடுதல் கடனை திரட்ட மத்திய நிதியமைச்சகம் சில மாநிலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு (Tamil Nadu), தெலுங்கானா (Telangana), ஆந்திரா (Andhra Pradesh), கர்நாடகா (Karnataka), மத்திய பிரதேசம் (Madhya Pradesh) என ஐந்து மாநிலங்கள் கூடுதல் கடனை பெற்றுக் கொள்ளலாம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மாநிலங்கள் இது தொடர்பான சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ததால் இந்த 5 மாநிலங்களுக்கு இந்த விலக்கு கிடைத்துள்ளது. கொள்கை சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கான நிபந்தனையின் பேரில் கூடுதல் கடனை திரட்ட மாநிலங்களை மே மாதத்தில் அரசாங்கம் (Central Government) அனுமதித்தது.
'மாவட்ட அளவிலான நிறுவன மேம்பாட்டு செயல் திட்டத்தின்' ('District Level Enterprise Improvement Action Plan)முதல் மதிப்பீடு முடிக்கப்பட வேண்டியது இந்த நிபந்தனைகளில் (Conditions) முக்கியமானது ஆகும்.
Also Read | 2.6 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500, பொங்கல் பரிசு: தமிழக முதல்வர்
இந்த ஐந்து மாநிலங்களும் தொழில் (Business) துவங்குவதை எளிமையாக்க வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்துள்ளன என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மொத்தம் ரூ .16,728 கோடி கூடுதல் கடனை (Loans) திரட்டிக் கொள்ள அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் (Budget) மேலாண்மை சட்டத்தின் கீழ், மாநிலங்கள் (States) தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (SGDP) மூன்று சதவீதமாக தங்கள் கடனை மட்டுப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மே மாதத்தில், கோவிட் -19 (Covid-19) நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சீர்திருத்தவாத விதிமுறைகளுடன் மாநிலங்களின் கடன் வரம்பை ஒட்டுமொத்தமாக இரண்டு சதவீதம் உயர்த்த மத்திய அரசு அனுமதி கொடுத்தது. நிதியமைச்சகத்தின் இந்த சலுகையை தமிழகம் (Tamil Nadu) சரியாக பயன்படுத்திக் கொள்ளும்.
Also Read | 20% இடஒதுக்கீடு கோரி, பேரூராட்சிகள் முன் திரண்டு போராட பாமக அழைப்பு
இந்த நிபந்தனைகளில் ஒரு நாடு-ஒரு-ரேஷன் அட்டைகள் (one-country-one-ration cards), தொழில் துவங்க இணக்கமான சூழல், நகராட்சி / பொது சேவைகளில் சீர்திருத்தங்கள் மற்றும் மின் துறையில் சீர்திருத்தங்கள் ஆகியவை அடங்கும். இந்த சீர்திருத்தங்களை 2020 பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும், அப்போதுதான் இந்த ஐந்து மாநிலங்களும் கூடுதல் கடன்களை வாங்க அனுமதிக்கப்படும்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR