குட் நியூஸ்: இந்த பணியாளர்களுக்கு PLB போனசில் அட்வான்ஸ் கிடைக்கும்... விவரம் இதோ

EPFO Update:இந்த முன்பணம் சரியான நேரத்தில் ஊழியர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொகை 60 நாள் ஊதியத்திற்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 10, 2024, 03:11 PM IST
  • EPFO பணியாளர்களுக்கு ஒரு அட்டகாசமான அப்டேட்.
  • உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸை (PLB) அட்வான்சாக செலுத்த EPFO ஒப்புதல்.
  • இந்த முன்பணம் யாருக்கு கிடைக்காது?
குட் நியூஸ்: இந்த பணியாளர்களுக்கு PLB போனசில் அட்வான்ஸ் கிடைக்கும்... விவரம் இதோ title=

EPFO Update: EPFO பணியாளர்களுக்கு ஒரு அட்டகாசமான அப்டேட் உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO தனது பணியாளர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் கீழ், 2023-24 ஆம் நிதியாண்டிற்கான, தகுதியான குரூப் C மற்றும் குரூப் B (நான்-கெசடட்) ஊழியர்களுக்கான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸை (PLB) அட்வான்சாக செலுத்த EPFO ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த முன்பணம் சரியான நேரத்தில் ஊழியர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொகை 60 நாள் ஊதியத்திற்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.

"பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தகுதியான குரூப் சி மற்றும் குரூப் பி (நான்-கெசடட்) ஊழியர்களுக்கு அனுமதிக்கப்படும், 2023-24 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸில் முன்பணத்தை வழங்க ஆணையத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று EPFO ஒரு உத்தரவில் தெரிவித்துள்ளது.

Productivity Linked Bonus 

- 2023-24 ஆம் ஆண்டிற்கான தகுதியான குரூப் சி மற்றும் குரூப் பி (நான்-கெசடட்) ஊழியர்களுக்கான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸில் ரூ.13,816 தொகை அளவிலான முன்பணம் செலுத்துவதற்கு ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.

மேலும் படிக்க | 8th Pay Commission: அகவிலைப்படி உயர்வுடன் ஊதியத் திருத்தமா? ஊழியர் சங்கங்களின் அதிரடி அப்டேட்

- இந்த அட்வான்ஸ் தொகையை பெறும் ஊழியர்கள் அனைவரும் கையொப்பமிடப்பட்ட உறுதிமொழியை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஓய்வூதிய நிதி அமைப்பு உத்தரவில் தெரிவித்துள்ளது.

- இந்த அட்வான்ஸ் தொகை இந்த ஆண்டுக்கான அவர்களின் PLB தொகையில் சரிசெய்யப்படும் என்றும், அதிகப்படியான தொகை உடனடியாக திருப்பித் தரப்படும் என்றும் ஊழியர்கள் உறுதியளிக்க வேண்டும்.

இந்த முன்பணம் யாருக்கு கிடைக்காது?

- ஏற்கனவே இபிஎஃப்ஓவில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இந்த முன்பணம், கிடைக்காது. 
- அக்டோபர் 11, 2024க்கு முன் பணம் செலுத்தப்பட வேண்டும்.
- இந்த முன்பணத்தைப் பெறும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையும், வழங்கப்பட்ட தொகையின் அளவும் அலுவலகத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும். 

இந்த அட்வான்ஸ் தொகைகளுக்கான செலவுகள் "உற்பத்தி இணைக்கப்பட்ட போனஸ்" (Productivity Linked Bonus) பட்ஜெட்டில் கணக்கிடப்படும். 

" “2023-24 ஆம் ஆண்டிற்கான PLB க்கு எதிராக முன்பணம் சரிசெய்யப்படும். மேலும்,  PLB தொகையில் ஒப்பீட்டில் அதிகப்படியான தொகை உடனடியாக திருப்பித் தரப்படும்” என்ற ஒரு உறுதிப்பாட்டை (இணைக்கப்பட்ட செயல்பாட்டில்) ஊழியர்கள் கையெழுத்திட வேண்டும். அப்போதுதான் அட்வான்ஸ் தொகை வழங்கப்படும். முன்பணம் செலுத்துவது PLB இன் மானியத்திற்கு பொருந்தும் அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது." என்று EPFO ​​உத்தரவு கூறியது.

மேலும் படிக்க | UPI பயனர்களுக்கு RBI அளித்த தீபாவளி பரிசு: பரிவர்த்தனை வரம்பு உயர்த்தப்பட்டது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News