LIC Pension Policy: எல்ஐசி என்பது அனைத்து தரப்பிலான மக்களும், நல்ல வருமானத்தைப் பெறுவதற்காக தங்கள் பணத்தை முதலீடு செய்யும், மிகவும் நம்பகமான தளங்களில் ஒன்றாகும். இந்த காப்பீடு நிறுவனம் தொடர்ந்து பல பாலிசி திட்டங்களுடன் இயங்கி வருகிறது.
எல்ஐசியின் அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பிரதான் மந்திரி வந்தனா வியா யோஜனா (PMVVY). இத்திட்டம், முதலீட்டாளர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்குகிறது. ஆனால், இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அரசு காலக்கெடு விதித்துள்ளது. அந்த காலக்கெடு வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
எல்ஐசி பிரதான் மந்திரி வந்தனா வியா யோஜனா என்றால் என்ன?
2017ஆம் ஆண்டு அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் முதியோர்களுக்கு (60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு) நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. அவர்களின் ஓய்வுக்குப் பிந்தைய செலவுகளை ஈடுகட்ட உதவுகிறது. தகுதியுடைய குடிமக்கள் இந்தத் திட்டத்தில் இருந்து உத்தரவாதமான ஓய்வூதியத்தைப் பெறலாம்.
மேலும் படிக்க | LIC Bima Ratna : நாள் ஒன்றுக்கு ரூ.138 முதலீட்டில், ரூ.13.5 லட்சம் வரை அள்ளலாம்!
எல்ஐசி பிரதான் மந்திரி வந்தனா வியா யோஜனா, திட்டத்தில் வரும் மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு முதலீடு செய்ய இயலாது. இந்தத் திட்டத்தில், வித்தியாசமான வருமானம் இந்திய அரசாங்கத்தால் ஏற்கப்படுகிறது. வேறுபட்ட வருமானம் என்பது எல்ஐசியால் ஈட்டப்படும் வருமானத்திற்கும், வருடாந்தர மானியமாக உறுதிசெய்யப்பட்ட வருமானத்திற்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.
இந்தத் திட்டத்தின் டெபாசிட்தாரர்கள் 10 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 7.4 மற்றும் ஆண்டுக்கு 7.66 சதவிகிதம் உத்தரவாத ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். டெபாசிட் செய்யப்பட்ட தொகை 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசிதாரருக்குத் திருப்பித் தரப்படுகிறது.
"2022-23 நிதியாண்டுக்கு, இத்திட்டம் ஆண்டுக்கு 7.40 சதவிகதம் உறுதியான ஓய்வூதியத்தை வழங்கும். இது மாதந்தோறும் செலுத்தப்படுகிறது. வரும் மார்ச் 31ஆம் தேதி வரை வாங்கிய அனைத்து பாலிசிகளுக்கும் 10 வருட பாலிசி காலத்திற்கு இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய விகிதம் செலுத்தப்படும்" என்று LIC அதன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
சந்தாதாரர் நிர்ணயித்த கால இடைவெளியின்படி - மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் - 10 வருட பாலிசியின் பல்வேறு காலகட்டத்தின் முடிவிலும் ஓய்வூதியம் செலுத்தப்படுகிறது. முதலீட்டு வரம்பை ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் படிக்க | LIC: ரூ. 1 கோடி சேர்க்க மாதம் ரூ. 833 இருந்தால் போதுமாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ