ரேஷன் கார்டு சமீபத்திய செய்திகள்: உங்களிடம் ரேஷன் கார்டு இருந்து, அரசாங்கத்தால் நடத்தப்படும் இலவச ரேஷன் திட்டம் அல்லது மானிய ரேஷன் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், இந்த புதுப்பிப்பைப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த செய்தியை நீங்கள் படித்தவுடன் திகைத்துப் போவீர்கள். பல்வேறு மாநிலங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் கலப்படம் செய்யப்படுகின்றன. மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் அறிக்கையின்படி, பல்வேறு மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பில்ஸ் தோல்வியடைந்துள்ளன.
அரசு எடுத்த நடவடிக்கை
அரசு கடைகளை நடத்துபவர்கள் ரேஷனில் கலப்படம் செய்கின்றனர் என்பது அமைச்சகத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கலப்படத்தில் ஈடுபடுவோர் மீது அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உ.பி., தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து அதிகபட்ச மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில் உ.பி.யின் மாதிரிகள் மிக மோசமான நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அமைச்சகத்தின் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் உள்ள அரசு ரேஷன் கடைகளில் இருந்து கடந்த ஆண்டு 165356 ரேஷன் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 31592 மாதிரிகள் தோல்வியடைந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ரயிலில் பயணிக்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான 7 விதிகள்!
ரேஷன் பொருட்களில் குறைபாடு இருப்பது தெரியவந்தது
மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் ரேஷன் பல்வேறு அதிகாரிகளின் பார்வையில் இருந்து தான் கடக்கிறது என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் அரசிடமிருந்து ரேஷன் கடைகளுக்கு வரும் ரேஷன் தரம் சிறப்பாக உள்ளது. இந்த கடைகளில் கிடைக்கும் ரேஷன் பொருட்களை உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆய்வு செய்தபோது, கடைக்காரர்களால் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது.
உ.பி.யில் இருந்து 26934 ரேஷன் சாம்பில்ஸ் எடுக்கப்பட்டன
இந்த நிலையில் மத்திய அரசின் கூற்றுப்படி, உ.பி.யில் இருந்து அதிகபட்சமாக 26934 ரேஷன் மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பழுதடைந்துள்ளன. மேலும் 118 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டதாக உ.பி அரசு அளித்த தகவலில் கூறப்பட்டுள்ளது. இரண்டாவது எண்ணில், தமிழ்நாட்டில் இருந்து 19858 மாதிரிகள் எடுக்கப்பட்டன, அங்கு 1033 மாதிரிகள் தோல்வியடைந்தன. ராஜஸ்தானில் 16022 மாதிரிகள் எடுக்கப்பட்டன, இங்கு 800 மாதிரிகள் தோல்வியடைந்தன. அதேபோல் மத்தியப் பிரதேசத்தில் 15355 மாதிரிகளும் மகாராஷ்டிராவில் 13118 மாதிரிகளும் எடுக்கப்பட்டன.
இதடகிடையில் மக்களுக்கு நல்ல ரேஷன் கிடைப்பதற்காக மாநில அரசு அவ்வப்போது மாதிரிகளை எடுத்து வருகிறது. இந்த மாதிரிகளின் முடிவுகள் திருப்திகரமாக இல்லை என்றால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் படிக்க | PPF-சுகன்யா சம்ரிதி விதிகளில் பெரிய மாற்றம், நிதி அமைச்சர் புதிய உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ