உங்க பொருள் Bank Locker-ல பாதுகாப்பா இருக்க கட்டணம் எவ்வளவு? தெரிஞ்சிக்கலாம் வாங்க…

SBI கிளைகள், மத்திய நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் மலிவு லாக்கர் சேவைகளை வழங்குகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 4, 2020, 04:21 PM IST
  • நமது உடமைகள் பாதுகாப்பாக இருப்பதற்கு வங்கி லாக்கர் ஒரு பாதுகாப்பான இடம்.
  • வங்கி லாக்கர்கள் ஒரு வங்கி வழங்கும் மிக முக்கியமான வசதிகளில் ஒன்றாகும்.
  • வங்கி லாக்கரை வாடகைக்கு எடுப்பது மலிவான காரியம் அல்ல.
உங்க பொருள் Bank Locker-ல பாதுகாப்பா இருக்க கட்டணம் எவ்வளவு? தெரிஞ்சிக்கலாம் வாங்க… title=

நம்மில் பெரும்பாலானோர் நமது மதிப்புமிக்க பொருட்களை ஒரு வங்கியில், லாக்கரில் வைக்க விரும்புகிறோம். நமது உடமைகள் பாதுகாப்பாக இருப்பதற்கு வங்கி லாக்கர் (Bank Locker) ஒரு பாதுகாப்பான இடம் என்பது பொதுவாக நம் அனைவரின் கருத்தாக உள்ளது.

பாதுகாப்பான வைப்புத்தொகை அல்லது வங்கி லாக்கர்கள் ஒரு வங்கி வழங்கும் மிக முக்கியமான வசதிகளில் ஒன்றாகும். இந்த லாக்கர்கள் ஸ்மால் லாக்கர் மீடியம், லார்ஜ் மற்றும் எக்ஸ்எல் லாக்கர் போன்ற பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.

இருப்பினும், வங்கி லாக்கரை வாடகைக்கு எடுப்பது மலிவான காரியம் அல்ல. இது வழக்கமாக லாக்கரின் அளவு மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் வங்கி கிளையைப் பொறுத்தது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) மார்ச் 31 அன்று இந்தியா முழுவதும் அதன் பாதுகாப்பான வைப்பு லாக்கருக்கான வாடகைக் கட்டணத்தை அதிகரித்தது. SBI கிளைகள், மத்திய நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் மலிவு லாக்கர் சேவைகளை வழங்குகின்றன.

ALSO READ: SBI-ல் salary account open செய்து locker முதல் loan வரை அனைத்திலும் சலுகை பெறுங்கள்!!

SBI வழங்கும் சிறிய, நடுத்தர, பெரிய மற்றும் எக்ஸ்எல் லாக்கர்களின் கட்டணங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

1) SBI-யின் சிறிய லாக்கர் வாடகை கட்டணம்

நகர்ப்புற மற்றும் மெட்ரோக்களுக்கு: ரூ 2000 + ஜிஎஸ்டி

கிராமப்புற மற்றும் செமி அர்பன் நகர்களுக்கு: 1500 + ஜி.எஸ்.டி.

2) SBI-யின் நடுத்தர லாக்கர் வாடகை கட்டணம்

நகர்ப்புற மற்றும் மெட்ரோக்களுக்கு: ரூ 4000 + ஜிஎஸ்டி

கிராமப்புற மற்றும் செமி அர்பன் நகர்களுக்கு: 3000 + ஜி.எஸ்.டி.

3) SBI-யின் பெரிய லாக்கர் வாடகை கட்டணம்

நகர்ப்புற மற்றும் மெட்ரோக்களுக்கு: ரூ 8000 + ஜிஎஸ்டி

கிராமப்புற மற்றும் செமி அர்பன் நகர்களுக்கு: 6000 + ஜி.எஸ்.டி.

4) SBI எக்ஸ்ட்ரா லார்ஜ் லாக்கர் வாடகை கட்டணம்

நகர்ப்புற மற்றும் மெட்ரோக்களுக்கு: ரூ 12000 + ஜிஎஸ்டி

கிராமப்புற மற்றும் செமி அர்பன் நகர்களுக்கு: 9000 + ஜி.எஸ்.டி.

5) ஒரு முறை லாக்கர் பதிவு கட்டணம்

சிறிய மற்றும் நடுத்தர லாக்கர்களுக்கு பதிவு கட்டணம் ரூ .500 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. பெரிய மற்றும் எக்ஸ்ட்ரா லார்ஜ் லாக்கர்களுக்கு நீங்கள் 1,000 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விதிகளின்படி, நீங்கள் ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது உங்கள் லாக்கரை இயக்கவில்லை என்றால் வங்கிகள் உங்கள் லாக்கரை திறக்க அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் அதற்கு முன்னர் வங்கிகள் உங்களுக்கு லாக்கரை இயக்க வேண்டும் அல்லது அதை சமர்ப்பித்து விட வேண்டும் என்ற அறிவிப்பை அனுப்புகின்றன.

ALSO READ: 70 lakh user-களுக்கு postpaid வசதிகள் அளிக்கும் Paytm வழங்கும் மற்ற சேவைகள் இவைதான்….

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News