இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு மிகப்பெரிய நல்ல செய்தியினை வழங்கவுள்ளார், அதாவது ஹோலி பண்டிகைக்கு முன்னதாக பிரதமர் சுமார் 12 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வழங்கவுள்ளார். பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 13வது தவணை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும், இந்த பணம் அவர்களின் நிதி தேவைக்கு சிறந்த பலனளிக்கும். இந்த விவசாயிகளுக்கு பிரதமர் மோடி சுமார் ரூ.16,000 கோடியை ஆன்லைனில் வழங்கவுள்ளார். இதுவரை விவசாயிகள் 12வது தவணைகள் மூலம் பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான பலன்களைப் பெற்றுள்ளனர். கொரோனா தொற்றுநோய் காலத்தில் மட்டும் சுமார் ரூ. 1.6 லட்சம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கான 12வது தவணையை வெளியிட்டார், இந்த தொகை மொத்தமாக ரூ.2.16 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
மேலும் படிக்க | திருப்பதி: அங்கப்பிரதட்சணம் செய்ய ஆன்லைன் டிக்கெட் ரிலீஸ்..! உடனே புக் பண்ணுங்க
பிஎம்-கிசான் நிதியின் 13வது தவணையை சரிபார்த்தல்:
1) https://pmkisan.gov.in/ என்கிற பிஎம்-கிசான்-ன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2) விவசாயியின் கார்னருக்கு கீழே ஸ்க்ரோல் செய்யவேண்டும்.
3) இப்போது 'டாஷ்போர்டு' என்கிற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) இப்போது நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு திருப்பி விடுப்படுவீர்கள்.
5) உங்கள் முழு விவரங்களையும் நிரப்ப வேண்டும்.
6) மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் பஞ்சாயத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
7) காண்பி என்கிற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
8) இப்போது உங்கள் விவரங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.
பிஎம்-கிசான் திட்டத்திலிருந்து விலக்கப்பட்டவர்களில் நிறுவன நிலம் வைத்திருப்பவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் விவசாயக் குடும்பங்கள், பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் மாநில அல்லது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களும், அரசு தன்னாட்சி அமைப்புகளும் அடங்கும். டாக்டர்கள், பொறியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் ரூ.10,000 மேல் மாத ஓய்வூதியம் உள்ள ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்களும் இந்த திட்டத்தின் பலன்களை பெற தகுதியற்றவர்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு இல்லாமல் பொருள் வாங்கலாம்; தமிழக அரசின் குட் நியூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ