கொரோனாவுக்குப் பிறகு அனைத்து தொழில்களும் மெல்ல வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப தொடங்கியிருக்கின்றன. புதிய நிறுவனங்களும் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது நல்ல அறிகுறி. அதேநேரத்தில் நம்பகமான துறையில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஏனென்றால் கொரோனா வைரஸ் கொடுத்திருக்கும் பாடம் சேமிப்பு குறித்த புரிதலையும் மக்களிடையே உருவாக்கியிருக்கிறது. ஆனால், மக்கள் நம்பகமான திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்ய தயாராக இருப்பதுடன் அதிக வட்டிகள் கொடுப்பதாக ஆசைவார்த்தை கொடுக்கும் நம்பகமற்ற திட்டங்களில் முதலீடு செய்ய தயாராக இல்லை.
மேலும் படிக்க | இந்த பழைய 2 பைசா இருந்தா ஜாக்பாட்…நீங்களும் கோடீஸ்வரர்
அந்த வகையில் பார்க்கும்போது தங்கம், வங்கி சேமிப்பு திட்டங்கள், நீண்டகால பங்குச்சந்தை முதலீடுகளை தேர்ந்தெடுக்கின்றனர். இதனுடன் இப்போது ரியல்எஸ்டேட் துறையிலும் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக வீடு மற்றும் நிலம் வாங்குவதில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். வீடு வாங்குவதும், நிலம் வாங்குவதும் முதலீடு செய்யும் பணத்துக்கு உத்தரவாதம் என மக்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்திருக்கிறது. இதுவே ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது. மத்திய அரசும் 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறை ஒரு டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டும் என கணித்துள்ளது.
அதற்கேற்ப ரியல் எஸ்டேட் துறைக்கு பல்வேறு வரிச் சலுகைகள், முத்திரை தாள் கட்டண விலக்குகள் அறிவித்திருக்கும் மத்திய அரசு, வீடு கட்டுவதையும், வீட்டு கடன் வழங்குவதையும் ஊக்குவித்து வருகிறது. இதன் பின்னணியில் இந்திய பொருளாதார வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது. ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யப்படும் பணம் நேரடியாக இந்தியாவின் ஜிடிபியில் எதிரொலிக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விவசாய துறைக்கு அடுத்தபடியாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது.
கொரோனா காலத்துக்குப் பிறகு சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது. இதனை கருத்தில் கொண்டே மத்திய அரசு சார்பில் பிரதான் மந்திரி வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதால் முதலீடு செய்ய ஆர்வம் இருப்பவர்கள் சந்தையை சரியாக ஆராய்ந்து ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வதை சிந்திக்கலாம். சந்தை அபாயம் மற்றும் தனிப்பட்ட ரிஸ்க் மற்றும் முதலீடு செய்யும் நிறுவனம் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு முதலீடு செய்வதும் அவசியம். அவசரப்பட்டு எந்தவொரு இடத்திலும் ஏமாந்துவிடாதீர்கள்.
மேலும் படிக்க | Blue Aadhaar Card: ப்ளூ ஆதார் கார்டு யாருக்கு... எப்படி விண்ணப்பிப்பது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ