கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது? இப்படி தெரிந்து கொள்ளுங்கள்

Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்பம் ஏற்பு அல்லது நிராகரிப்பு குறித்த நிலையை இந்த வழியில் தெரிந்து கொள்ளுங்கள். 

Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் உரிமைத் தொகை புதிய விண்ணப்பங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை பயனாளிகளே ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

1 /8

தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) வழங்கி வருகிறது. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பயானிகளின் வங்கி கணக்கிலேயே நேரடியாக டெபாசிட் செய்து கொண்டிருக்கிறது. 

2 /8

இதுவரை சுமார் 1 கோடியே 16 லட்சம் பயனாளிகள் மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். விரைவில் புதிய பயனாளிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்.   

3 /8

கலைஞர் உரிமைத் தொகைக்கு ஏற்கனவே விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்ட பயனாளிகள் மேல்முறையீடு செய்ய முடியும். தகுதி வாய்ந்த பயனாளிகள் என்பதற்கான ஆவணங்களை அருகில் இ-சேவை மூலம் வருவாய்துறை கோட்ட அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம். 

4 /8

புதிய விண்ணப்பதாரர்களும் இ-சேவை மையங்கள் வழியாகவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக புதிய தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட உள்ளது.

5 /8

மகளிர் உமைத் தொகை பெற குறிப்பிட்ட வரம்புகளை அரசு நிர்ணயித்திருக்கிறது. அதனை நீங்கள் தெரிந்து கொண்டு விண்ணப்பிப்பது மட்டுமே சிறந்த முடிவாக இருக்கும். இதனால் விண்ணப்பம் மீண்டும் தள்ளுபடி செய்யப்படாமல் இருக்கும். 

6 /8

மகளிர் உரிமைத் தொகைக்கு நீங்கள் விண்ணப்பித்து, அதன் நிலை தெரியாமல் இருந்தால் நீங்கள் ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்பித்தின் நிலையை தெரிந்து கொள்ளலாம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆன்லைன் பக்கத்துக்கு சென்றால் முகப்பு பக்கத்தில், "உங்கள் விண்ணப்பத்தின் நிலை அறிய’ என்ற ஆப்சன் இருக்கும். அதனை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும். 

7 /8

"பொதுமக்கள் உள்நுழைவு" என்ற ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்தால், கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்பத்துக்கு (Kalaingar Magalir Urimai Thogai Application) கொடுத்த ஆதார் எண்ணில் இருக்கும் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதனை உள்ளிட்டால் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் அறிந்து கொள்ளலாம். 

8 /8

கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்பத்துக்கு அரசு வங்கி, தனியார் வங்கி என எந்த வங்கியாக இருந்தாலும் பணம் செலுத்தப்படும். ஆனால் உங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டால் மட்டுமே பணம் வரும். விண்ணப்பம் ஏற்கப்பட்டாலும், நிராகரிக்கப்பட்டாலும் உங்களின் மொபைல் எண்ணுக்கு SMS வரும். அதனடிப்படையில், கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம்.