NEET & JEE தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம்: மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் ஆலோசனை

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் (Amarinder Singh) கூறியுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2020, 03:10 PM IST
  • நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம்: பஞ்சாப் முதல்வர்.
  • தொற்றுநோய்கள் மத்தியில் மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியம்
  • ஆகஸ்ட் 28 அன்று காங்கிரஸ் நாடு தழுவிய அளவில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
NEET & JEE தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம்: மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் ஆலோசனை title=

புது டெல்லி: நீட்-ஜேஇஇ தேர்வுகள் (NEET & JEE Exam) கட்டாயமாக நடைபெறும் என மத்திய அரசு பிடிவாதமாக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் குழுக்கள் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டியுள்ளனர். இந்த வழக்கில், இரண்டு பிரிவுகள் இருக்கின்றனர். ஒரு பிரிவு இனி தேர்வு எழுவதை தாமதிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.  அதே நேரத்தில், மற்றொரு பிரிவு தொற்றுநோய்களின் போது மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியம் என்று கூறுகின்றனர் இப்படி இரண்டு தரப்பும் கூறிவரும் வேளையில், இதுதொடர்பாக, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தேர்வுகளை கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு ஓரி ஆலோசனையை பரிந்துரைத்துள்ளார்.

அதாவது நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஆன்லைனில் நடத்தலாம் என்று அமரீந்தர் சிங் (Amarinder Singh) கூறியுள்ளார். அவரைப் பொறுத்தவரை மத்திய அரசும் இதற்கு உடன்படும் என்றும், அதே நேரத்தில் உலகம் முழுவாதும் இந்த நேரத்தில் ஆன்லைன் தேர்வுகள் மற்றும் வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். இதை ஏன் இந்தியாவில் செய்ய முடியாது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

ALSO READ |  திட்டமிடப்படி JEE மற்றும் NEET தேர்வுகள் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை உறுதி

இந்த Neet மற்றும் JEE தேர்வு நடத்தையை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 28 அன்று காங்கிரஸ் நாடு தழுவிய அளவில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறது. இந்த ஆர்ப்பாட்டம் மத்திய அரசு அலுவலகங்களுக்கு வெளியே மற்றும் மாநில மற்றும் மாவட்ட தலைமையகங்களுக்கு வெளியே மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், மத்திய அரசின் முடிவுக்கு எதிராக ஆன்லைன் பிரச்சாரத்தை காங்கிரஸ் நடத்தும். #SpeakUpForStudentSaftey என்ற பெயரில் இந்த பிரச்சாரத்தை காங்கிரஸ் நடத்தும். 

முன்னதாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (Sonia Gandhi) மற்றும் பிற தலைவர்கள் கொரோனா காலத்தில் இந்த தேர்வை நடத்துவது குறித்து தங்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். மனிஷ் சிசோடியா கூறுகையில், அரசாங்கம் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது வேறு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ALSO READ |  கொரோனாவை கட்டுப்படுத்தும் வரை Neet, JEE தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Trending News