#Karnataka நம்பிக்கை வாக்கெடுப்பில் HD குமாரசாமி வெற்றி!!

கர்நாடக முதல்வர் HD குமாரசாமி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சுமார் 117 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்! 

Last Updated : May 25, 2018, 04:18 PM IST
#Karnataka நம்பிக்கை வாக்கெடுப்பில் HD குமாரசாமி வெற்றி!! title=

கர்நாடக முதல்வர் HD குமாரசாமி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சுமார் 117 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்! 

222 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றிப்பெற்றன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிக தொகுதிகளை வென்ற பாஜக-வை ஆட்சி அமைக்குமாறு கர்நாடக கவர்னர் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். மேலும் 15 நாள் அவகாசத்தில் பெருன்பான்மையினை நிருப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஆளுநர் விதித்தார். ஆனால் பெருபான்மையை (மே 19) நிருப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால் மே 19-ஆம் நாள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நடப்பதற்கு முன்னரே, உருக்கமான உறையினை நிகழ்த்திய முதல்வர் எடியூரப்பா, தனது முதல்வர் பதவியினை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணியின் சார்பில் HD குமாரசாமி அவர்களை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதை தொடர்ந்து HD குமாரசாமி கர்நாடகா முதலவராக கடந்த புதன்கிழமை பதவி ஏற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன், புதிய சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்வராக பதவியேற்று இருக்கும் குமாரசாமி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். அவர் பேசிய பின் பாஜகவை சேர்ந்த எடியூரப்பா பேசினார். 

இதையடுத்து பாஜக கட்சி மொத்தமாக அவையைவிட்டு வெளியேறியது. இதனால் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு மொத்தம் 115 பேர் ஆதரவு தெரிவித்தனர். சபாநாயகர் ஒட்டு இதில் கணக்கில் வராது. இதனால் கர்நாடக முதல்வராக பதவியேற்று இருக்கும் குமாரசாமி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

இவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் சுமார் 117 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்!

 

Trending News