முட்டை ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. உடலுக்கு தேவையான புரதம் அதில் கிடைக்கிறது. தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது. அதில் இருக்கும் புரதம், சோடியம், செலினியம், கால்சியம், போலேட் போன்ற தாதுக்கள் உடலை வலுவாக்குகின்றன. அதோடு முட்டையின் வெள்ளைக்கருவில் கொழுப்பு இல்லை. இந்நிலையில், பல நேரங்களில் சந்தையில் போலி முட்டை விற்பனை செய்யப்படுவது குறித்து அடிக்கடி பேசப்படுகிறது. இந்த போலி முட்டைகள் மிகவும் ஆபத்தானவை. இவை உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்நிலையில், போலி மற்றும் உண்மையான முட்டைகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதை அறிந்து கொள்ளலாம். அவற்றை அடையாளம் காண சில எளிய வழிகள் உள்ளன.
போலி முட்டைகளை எவ்வாறு கண்டறிவது
1. போலி முட்டை
போலி முட்டையை அடையாளம் காண முட்டை ஓடு போதுமானது, நீங்கள் போலி முட்டை ஓடுகளை நெருப்பின் மீது காட்டினால், அது வேகமாக தீப்பிடிக்கும். ஏனெனில் இது சில பிளாஸ்டிக் போன்ற பொருட்களால் ஆனது, ஆனால் உண்மையான முட்டை ஓடு தீயில் படும் போது, அது தீப்பிடிக்காது. உண்மையான முட்டையை நெருப்பில் போட்டால் சிறிது நேரத்தில் கருப்பாக மாறிவிடும்.
மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!
2. சத்தம்
உண்மையான மற்றும் போலி முட்டைகளை, அதில் இருந்து வரும் சத்தத்தை கொண்டு அடையாளம் காண சிறந்ததாக கருதப்படுகிறது. முட்டையை கையில் அசைக்கும்போது, போலி முட்டையிலிருந்து ஒரு வகை சத்தம் வரும், அதேசமயம் உண்மையான முட்டையில் அப்படி சத்தம் ஏதும் வராது.
3. மஞ்சள் கரு
உண்மையான மற்றும் போலி முட்டைகளை மஞ்சள் கரு மூலம் அடையாளம் காணலாம். உண்மையான முட்டையின் உடைத்து பார்க்கும்போது அதன் மஞ்சள் கரு வித்தியாசமாக, தனித்து இருக்கும். அதேசமயம் போலி முட்டையின் மஞ்சள் கருவில் வெள்ளை திரவம் கலந்து தோன்றும்.
மேலும் படிக்க | Health Alert: முட்டையுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ