Budget 2025: விவசாயிகளுக்கு குட் நியூஸ், பிஎம் கிசான் தொகை அதிகரிக்கிறதா?

Union Budget 2025: பட்ஜெட்டில் பெண்கள், சம்பள வர்க்கத்தினர், மூத்த குடிமக்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், வணிகர்கள் என அனைவருக்கும் அவரவருக்கான பிரத்யேக எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த பதிவில் விவசாயிகளுக்கு பட்ஜெட் குறித்து உள்ள எதிர்பார்ப்புகள் பற்றி காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 26, 2025, 01:40 PM IST
  • கிசான் சம்மான் நிதி திட்டம் என்றால் என்ன?
  • பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் தொகை அதிகரிக்குமா?
  • விவசாயிகளுக்கு 19வது தவணை எப்போது கிடைக்கும்?
Budget 2025: விவசாயிகளுக்கு குட் நியூஸ், பிஎம் கிசான் தொகை அதிகரிக்கிறதா? title=

Union Budget 2025: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட் குறித்து பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. பெண்கள், சம்பள வர்க்கத்தினர், மூத்த குடிமக்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், வணிகர்கள் என அனைவருக்கும் அவரவருக்கான பிரத்யேக எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த பதிவில் விவசாயிகளுக்கு பட்ஜெட் குறித்து உள்ள எதிர்பார்ப்புகள் பற்றி காணலாம்.

Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்

விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டில் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. தங்களுக்கான சாதகமான அறிவிப்புகளுக்காக விவசாயிகள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்த முறை பட்ஜெட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதிக்கான தவணை அதிகரிக்கக்கூடும் என்று விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். தற்போது, ​​விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் கீழ் ஆண்டுதோறும் ரூ.6,000 பெறுகிறார்கள். இதில் நான்கு மாத இடைவெளியில் மூன்று தவணைகளாக ரூ.2000 வழங்கப்படுகிறது. இதுவரை, 13 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.

PM Kisan Yojana: கிசான் சம்மான் நிதி திட்டம் என்றால் என்ன?

நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளை நம்பியே வாழ்கின்றனர். ஆகையால் விவசாயிகளின் நலன்களில் அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. இன்றும் நாட்டில் விவசாயம் மூலம் போதுமான அளவு வருமானம் ஈட்ட முடியாமல் அவதியில் உள்ள விவசாயிகள் பலர் உள்ளனர். அத்தகைய விவசாயிகளுக்கு இந்திய அரசு சலுகைகளை வழங்குகிறது. 

அரசாங்கம் விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இவற்றில் ஒன்று கிசான் சம்மான் நிதி யோஜனா. விவசாயிகளுக்கு நிதி சலுகைகளை வழங்குவதற்காக இந்திய அரசு 2018 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தைத் தொடங்கியது. விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதன் கீழ் நாடு முழுவதும் உள்ள பல விவசாயிகள் பயனடைந்துருகின்றனர்.

Pradhan Mantri Kisan Samman Nidhi: பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் தொகை அதிகரிக்குமா?

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெரிய அளவில் பயனடைந்து வருகின்றனர். இப்போது விவசாயிகளுக்கு ஒரு பெரிய செய்தி வரக்கூடும். இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்படும் நன்மைகளின் அளவு அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000 கொடுக்கப்படுகிறது. இந்த தொகையில் ரூ.4000 அதிகரிப்பு ஏற்படலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள். மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக மத்திய அரசு பல பெரிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பிஎம் கிசான்: விவசாயிகளுக்கு 19வது தவணை

பிப்ரவரி 1, 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் தவணைத் தொகை அதிகரிக்கக்கூடும் என்று விவசாயிகள் நம்புகிறார்கள். பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் கீழ் மத்திய அரசு இதுவரை 18 தவணைத் தொகைகளை அளித்துள்ளது. இப்போது இந்தத் திட்டத்தில், விவசாயிகள் 19வது தவணைக்காகக் காத்திருக்கிறார்கள். இது பிப்ரவரி 2025 இல் வெளியிடப்படலாம்.

நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள்

பிப்ரவரி 1, 2025 அன்று மத்திய பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும்போது விவசாயிகள் கிசான் சம்மான் தொகை தவிர இன்னும் சில நல்ல செய்திகளுக்காகவும் காத்திருக்கிறார்கள். இவர்களின் எதிர்பார்ப்புகள் எந்த அளவிற்கு நிறைவேறும் என்பது பட்ஜெட் தினத்தன்றுதான் தெரியும்.

மேலும் படிக்க | UPS, NPS, OPS: 3 ஓய்வூதிய முறைகளிலும் உள்ள வேறுபாடுகள் என்ன? UPS எப்போது அமலுக்கு வரும்?

மேலும் படிக்க | Budget 2025: இந்த பட்ஜெட்டில் பழைய வரி முறை முற்றிலுமாக நீக்கப்படுமா? புதிய வரி அடுக்குகள் வருமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News