Thalapathy 69 Title Jana Nayagan Meaning : விஜய்யின் கடைசி படத்திற்கு ஜன நாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த தலைப்பின் அர்த்தம் பற்றி இங்கு பார்ப்போம்.
Thalapathy 69 Title Jana Nayagan Meaning : விஜய்யின் கடைசி மற்றும் 69வது படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியானது. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் வருகையை குறிப்பிடும் வகையில் இருக்கும் இந்த டைட்டில் சில தரப்பில் இருந்து வரவேற்பையும் சிலர் தரப்பில் இருந்து விமர்சனத்தையும் சம்பாதித்துள்ளது. இந்த நிலையில், இந்த டைட்டிலின் அர்த்தம் குறித்து இங்கு பார்ப்போம்.
தளபதி 69 படம், விஜய்க்கு கடைசி படமாகும். இந்த படத்தின் பூஜை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தொடர்ந்து ஷூட்டிங் நடைப்பெற்று வருகிறது.
இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி டியோ, நரேன், மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுக்கான காட்சிகள் கூடிய விரைவில் படமாக்கப்பட உள்ளன.
பூஜா ஹெக்டே, விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்ததை தொடர்ந்து இப்போது இரண்டாம் முறையாக அவருடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தின் பெயர் நாளைய தீர்ப்பு என்றும் கூறப்பட்டது. ஆனால், அது படத்தின் பெயர் அல்ல..
தளபதி 69 படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதில் விஜய் ரசிகர்களுடன் எப்போதும் எடுத்துக்கொள்ளும் செல்ஃபி போல ஒரு படமும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டைட்டிலுக்கு அதிகளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டிருந்தாலும், ஜன நாயகன் என்ற தலைப்பின் அர்த்தம் பலருக்கு தெரியவில்லை. ஜன நாயகன் என்றால் ஆங்கிலத்தில் People's Hero என்று அர்த்தம்.
மக்களுடன் ஒன்றாக இணைந்து, அவர்களுக்காக நிற்பவன்தான் மக்களின் நாயகன் ஆவான். அவனுக்கு தைரியம், தன்னலமின்மை, ஒருமைப்பாடு, இரக்கம் போன்ற குணாதிசயங்கள் இருக்க வேண்டும். எனவே, விஜய்யின் கேரட்கர் ஜன நாயகன் படத்தில், இந்த குணாதிசயங்கள் நிறைந்த கதாப்பாத்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.