குடியரசு தினம் 2025: இதுவரை நீங்கள் அறிந்திராத 10 மிக முக்கியமான தகவல்கள்

Republic Day 2025: குடியரசு தின விழா குறித்து இதுவரை நீங்கள் அறிந்திராத 10 முக்கிய தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Republic Day | ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தினவிழா (Republic Day) குறித்து இதுவரை நீங்கள் அறிந்திராத 10 முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

1 /12

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று தனது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 26 ஆம் தேதி 76-வது குடியரசு தினத்தை இந்தியா கொண்டாடுகிறது. இந்த குடியரசு நாள் என்பது 1950 ஆம் ஆண்டு இந்தியா சொந்தமாக அரசியலமைப்பை உருவாக்கி ஏற்றுக்கொண்டதைக் குறிக்கிறது.

2 /12

இந்த நாளில் தான் இந்தியா ஒரு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி இந்தியா முழுவதும் ஜனவரி 26 ஆம் தேதி தேசிய விடுமுறை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியரும் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தினவிழா (Republic Day 2025) குறித்து இதுவரை நீங்கள் அறிந்திராத 10 முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். 

3 /12

1. 1930 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸால் செய்யப்பட்ட பூர்ண ஸ்வராஜ் பிரகடனம் செய்யப்பட்ட நாளும் இதே நாள்தான். அதே ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழுமையான சுதந்திரம் கோரும் பிரகடனம் இது.

4 /12

2. குடியரசு தின அணி வகுப்புக்கான தயாரிப்புகள் எல்லாம் முந்தைய ஆண்டு ஜூலை மாதமே தொடங்கிவிடும். ஒரு வருடம் முன்பு குடியரசு தின விழா அணி வகுப்பில் யாரெல்லாம் பங்கேற்பாளராக இருப்பார்கள் என்பது தெரிவிக்கப்படும். அணிவகுப்பு நடைபெறும் நாளில், அவர்கள் அதிகாலை 3 மணிக்குள் அணி வகுப்பு இடத்திற்கு வந்துவிடுவார்கள். இந்த அணி வகுப்புக்காக மட்டும் சுமார் 600 மணி நேரம் பயிற்சி செய்திருப்பார்கள்.

5 /12

3. ஒவ்வொரு ஆண்டும், வேறொரு நாட்டின் பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது ஒரு நாட்டின் அதிபர் குடியரசு தின அணிவகுப்புக்கு தலைமை விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்

6 /12

4. முதல் துப்பாக்கிச் சூடு நடந்ததும் தேசிய கீதம் இசைக்கப்படும். அடுத்த துப்பாக்கிச் சூடு 52 வினாடிகளுக்குப் பிறகு சுடப்படும். துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் பீரங்கிகள் 1941 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டவை. 

7 /12

5. ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்திற்கு பிரத்யேகமாக ஒரு கருப்பொருள் தீர்மானிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசுத் துறைகள் அந்த கருப்பொருளுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் மாநில வாகனங்களை தயார் செய்யும். இந்த ஆண்டு குடியரசு தின அணி வகுப்பில் காட்சிப் பொருளுக்கான கருப்பொருள் 'ஸ்வர்ணிம் பாரத் - விராசத் அவுர் விகாஸ்' (தங்க இந்தியா - பாரம்பரியம் மற்றும் மேம்பாடு) என முடிவு செய்யப்பட்டுள்ளது. அவை தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார பாரம்பரியம் போன்ற பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும்.

8 /12

6. குடியரசு தின விழா நாளில் பிரமாண்ட அணிவகுப்பு நடக்கும். ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ரைசினா மலையிலிருந்து தொடங்கி, கர்தவ்ய பாதை வழியாக, இந்தியா கேட் வழியாக, வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையை இந்த அணி வகுப்பு அடையும்.

9 /12

7. இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கியவர் டாக்டர் பிஆர் அம்பேத்கர். அவர் தலைமையிலான குழு உருவாக்கிய அரசியலமைப்பு வழியாகவே நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் இந்தியாவின் அனைத்து துறைகளும் இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

10 /12

8. முதல் குடியரசு தின கொண்டாட்டங்கள் 1950 ஆம் ஆண்டு புதுதில்லியில் உள்ள இர்வின் மைதானத்தில் (இப்போது மேஜர் தியான் சந்த் தேசிய மைதானம்) நடைபெற்றன. இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட விமானங்களும், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3,000 வீரர்களும் பங்கேற்றனர்.

11 /12

9. குடியரசு தினத்தன்று, உயிர்களைக் காப்பாற்றுவதில் அல்லது அநீதிகளுக்கு எதிராக நிற்பதில் விதிவிலக்கான துணிச்சலைக் காட்டிய குழந்தைகளை கௌரவிப்பதற்காக தேசிய துணிச்சல் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

12 /12

10. இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், நாட்டின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை அங்கீகரிக்கும் வகையில், இந்தியக் குடியரசுத் தலைவரால் குடியரசு தின விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.