புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்.... பணம், புகழ், பதவி, அனைத்தும் கிட்டும்

Budhan Peyarchi Palangal: இன்று மாலை நடக்கவுள்ள புதன் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகள் எவை? எந்த ராசிக்கு பண வரவு அதிகமாகும்? புதன் பெயர்ச்சி ராசிபலனை இங்கே காணலாம்.

Budhan Peyarchi Palangal: பேச்சாற்றல், தர்க்கம், நுண்ணறிவு, தகவல் தொடர்பு, கணிதம், புத்திசாலித்தனம் மற்றும் நட்பு ஆகியவற்றிற்கு காரணி கிரகமாக புதன் இருக்கிறார். புதன் கிரகங்களின் இளவரசன் என்றும் அழைக்கப்படுகிறார். இன்று புதன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. புதன் பெயர்ச்சி மற்றும் அதனால் உருவாகும் புத ஆதித்ய யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

1 /11

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தெரியும். சிலருக்கு இதனால் நற்பலன்கள் கிடைக்கும், சிலருக்கு பிரச்சனைகள் உருவாகும்.

2 /11

ஜனவரி 4 ஆம் தேதி புதன் தனுசு ராசியில் பெயர்ச்சி ஆனார். ஒன்பது கிரகங்களின் அரசனான சூரியன் இந்த ராசியில் இருப்பதால் இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவானது. அதன் பிறகு ஜனவரி 14-ம் தேதி சூரியன் மகர ராசியில் பெயர்ச்சி ஆனார். 24 ஆம் தேதி, அதாவது இன்று புதனும் மகர ராசிக்குள் நுழைவதால், மீண்டும் மகரத்தில் புத ஆதித்ய (Budhaditya Yogam) யோகம் உருவாகும்.

3 /11

புதன் பெயர்ச்சி மற்றும் அதனால் உருவாகும் புத ஆதித்ய யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

4 /11

மேஷம்: புதன் பெயர்ச்சியின் காரணமாக அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கக்கூடும். பணத்தை சேமிப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். மேலும், இந்த காலகட்டத்தில் நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பணி இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

5 /11

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அளிக்கும். தந்தையின் உதவியுடன் பல பணிகளை முடிக்க முடியும். முதலீட்டிலிருந்து லாபம் ஈட்ட வாய்ப்பு உள்ளது. உங்கள் வேலையில் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவ தயாராக இருங்கள். உங்கள் குழந்தைகளின் சாதனைகளைப் பற்றி பெருமைப்படுங்கள். வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

6 /11

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அதிக நன்மைகளை அளிக்கும். வர்த்தகம் அல்லது பங்குச் சந்தை தொடர்பான வேலைகளைச் செய்தால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். தங்கள் பணியிடத்தில் அதிருப்தி அடைந்தவர்களுக்கு புதிய இடத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கக்கூடும். குழந்தைகளின் படிப்பில் ஏற்படும் முன்னேற்றத்தால் நீங்கள் திருப்தி அடைவீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும்.

7 /11

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி நன்மை பயக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வசதிகள் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும்.

8 /11

துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு புதன் பெயரச்சி லாபகரமானதாக இருக்கும். உங்கள் பதவி மற்றும் கௌரவம் அதிகரிக்கக்கூடும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பை உங்கள் மேல் அதிகாரி மற்றும் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் பேச்சாற்றல் மேன்மையடையும். உங்கள் எதிரிகளை சமாளிப்பதில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் திடீர் உயர்வு ஏற்படும். இது நன்மை பயக்கும்.  

9 /11

மகரம்: புதன் பெயர்ச்சியின் பயனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் துணைவருடனான உங்கள் உறவு வலுவடையும். இந்த காலகட்டத்தில், உங்களுக்கு மரியாதையும் கௌரவமும் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்தலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

10 /11

கும்பம்: புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் பல நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இந்தக் காலகட்டத்தில் வெற்றிகரமாக நடந்துமுடியும். உங்கள் ஆளுமை மேம்படும். வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடும். வாழ்க்கைத் துணைவருடனான உறவுகள் நன்றாக இருக்கும். இருவருக்கும் இடையே நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். உறவுகள் வலுவாகலாம்.

11 /11

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.