செவித்திறன் குறைபாடு உள்ளதா? இந்த 7 யோகாசனங்களை முயற்சி செய்து பாருங்க..பக்கா ரிசல்ட் கிடைக்கும்!

குறிப்பிட்ட உடல் உறுப்புகள் மற்றும் உடல் நலப் பிரச்சனைகளைச் சரிசெய்யக் குறிப்பிட்ட சில யோகாசனங்கள் உங்களுக்காகப் பரிந்துரைக்கப்படுகிறது. அவற்றில் செவித்திறன் குறைபாட்டைச் சரிசெய்யவும் மற்றும் காது கேட்டும் திறனை ஊக்குவிக்கவும் சில யோகாசனங்கள் உங்களுக்காக இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 

பொதுவாக யோகாசனம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும்தான் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு யோகாசனங்களும் நம் உடலின் ஒவ்வொரு பாகங்களை வலுப்படுத்துகிறது. அதுப்ப்போல் இந்த 7 யோகாசனங்கள் குறிப்பாக காதுகேட்கும் குறைப்பாகவுள்ளவர்கள் மற்றும் செவித்திறனின் ஏதேனும் பாதிப்பில் உள்ளவர்கள் இந்த யோகாசனத்தைச் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

 

1 /8

புஜங்காசனம்: இதனை கோப்ரா போஸ் என்று அழைப்பர். உங்கள் கழுத்துக்களை மேல் தூக்கி நீட்டி மனதை அமைதிப்படுத்தவும். இதுபோன்று தொடர்ந்து செய்துவருவதால் காதுகளுக்கு இரத்த ஓட்டம் சீராகச் செல்லும் என்று சொல்லப்படுகிறது.  

2 /8

விருக்ஷாசனம்: இதனை டிரி போஸ் என்று அழைப்பர். இந்த ஆசனம் உங்கள் தசைகளை வலுப்படுத்தி மேலும் காதுகளுக்குச் சீரான இரத்த ஓட்டத்தை எடுத்துச் செல்கிறது.  

3 /8

சர்வாங்காசனம்: இந்த ஆசனம் செய்வதால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். மேலும் தலை மற்றும் காதுகளுக்குச் சீரான இரத்த ஓட்டம் மேம்படும்.  

4 /8

ஹலாசனம்: இந்த ஆசனம் செய்வதால் உங்கள் கழுத்து மற்றும் தொண்டைக்குக் கவனம் செலுத்துகிறது. இதனால் செவித்திறன் செயல்பாடு மேம்படும்.  

5 /8

மத்ஸ்யாசனம்: மீன் போஸ் என்று அழைக்கப்படும் இந்த ஆசனம் காதுகளுக்கு இரத்த ஓட்டத்தை எடுத்துச் செல்கிறது. மேலும் இது காதுகேளாமையை குணப்படுத்துகிறது.

6 /8

அனுலோமா விலோமா:  இதனை நாசி சுவாசம் என்று அழைக்கப்படும். இந்த ஆசனம் நரம்பு மண்டலத்தைச் சம நிலைப்படுத்தி, சுவாசத்தை சீராக்கி மற்றும் மனதை அமைதிப்படுத்துகிறது. 

7 /8

சவாசனம்: இந்த யோகாசனத்தைச் செத்த பிணம் போஸ் என்று அழைப்பர். இந்த ஆசனம் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைத்து மனதைத் தளர்த்துகிறது. மேலும் இது செவித்திறன் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. 

8 /8

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)