ஒரே நாளில் தமிழில் வெளியாகும் 6 படங்கள்! முதலில் எதை பார்க்கலாம்?

Kollywood Movies Releasing Today In Theatres : தமிழ் திரையுலகின் முக்கியமான சில படங்கள் இன்று தியேட்டரில் வெளியாகின்றன. அவற்றின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.

Kollywood Movies Releasing Today In Theatres : கோலிவுட் திரையுலகை பொறுத்தவரை, ஜனவரி மாதம் ஆரம்பித்தவுடன் பெரிய ஹீரோக்களின் படங்கள் முதல் சின்ன பட்ஜெட் படங்களின் ஹீரோக்கள் வரை பல படங்கள் வெளியாகும். ஒரு சில படங்கள் மொத்தமாக ஒரே நாளில் கூட ரிலீஸாகிவிடும். அப்படி, ஜனவரி 24ஆம் தேதியான இன்று, தமிழில் மட்டும் 6 படங்கள் வெளியாகின்றன. அவற்றில் சில, ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்களாகவும் இருக்கின்றன. இவை குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

1 /8

தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நடிகராக இருப்பவர், மணிகண்டன். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், அந்த வகையில் சமீபத்தில் ஹீரோவாக நடித்திருந்த படம் குடும்பஸ்தன் இந்த படத்தின் பத்திரிகையாளர்களுக்கான ஷோ நேற்று நடந்தது. இதையடுத்து இந்த படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்களும் வெளிவந்துள்ளது. இந்த படத்தை ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார்.

2 /8

பாட்டல் ராதா படத்தை, தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கிறார். இதில் குரு சோமசுந்தரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிரார். இந்த படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

3 /8

குழந்தைகள் முன்னேற்றக்கழகம் திரைப்படத்தில் யோகி பாபு, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படம் குழந்தைகளையும் பெரியவர்களையும் சிரிக்க வைக்கும் எனக்கூறப்படுகிறது.

4 /8

ஜம்ப் கட்ஸ் ஹரி பாஸ்கர் முதன்முறையாக ஹீரோவாக நடித்திருக்கும் படம், மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங். இதில் லாஸ்லியா நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நிலையில், படம் வெளிவந்த பிறகு விமர்சனங்கள் தெரியவரும்.

5 /8

சுந்தர்.சி நடிப்பில் மணி செய்யோன் இயக்கியிருக்கும் படம், வல்லான். கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம், நேரடியாக திரையரங்கில் வெளிவந்திருக்கிறது. இதற்கு ரசிகர்கள் ஓரளவு வரவேற்பினை கொடுத்திருக்கின்றனர்.

6 /8

போஸ் வெங்கட் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், பூர்வீகம். கிராமத்து கதையை கொண்ட இந்த படத்தை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் கொஞ்சம் தாமதம் காட்டி வருகின்றனர்.

7 /8

ஷா, ஜாய்ஸ்திஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் நான் வேற மாதிரி. இந்த படமும் க்ரைம் த்ரில்லர் பாணியில்தான் உருவாகியிருக்கிறது. இதற்கு பிற ஊடகங்கள் 5ற்கு 2.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளது.

8 /8

தமிழில் ஹாங் காங் வாரியர்ஸ் மற்றும் ராமாயணா தி லெஜண்ட் ஆஃப் ப்ரின்ஸ் ராமா ஆகிய இரண்டு டப்பிங் படங்களும் வெளியாகியுள்ளன. இவை இரண்டும், குழந்தைகள் மற்றும் வெளிநாட்டு சினிமா பிரியர்களை தியேட்டர் பக்கம் ஈர்த்து வருகிறது.