EPFO Update: ஒழுங்கமைக்கப்பட்ட பணிகளில் பணிபுரியும் நபரா நீங்கள்? மாதா மாதம் உங்கள் சம்பளத்திலிருந்து இபிஎஃப் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படுகின்றதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
EPFO: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
EPFO ஊழியர்களின் இபிஎஃப் கணக்குகளை (EPF Account) நிர்வகிக்கிறது. இபிஎஃப் உறுப்பினர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்கவும், பணம் எடுக்கும் செயல்முறையை எளிதாக்கவும், EPFO அவ்வப்போது பல புதிய விதிகளை ஏற்படுத்துகின்றது, பழைய விதிகளில் மாற்றங்களையும் செய்கின்றது. சமீபத்திலும் EPFO தனது செயல்முறைகளில் பெரிய மாற்றங்களை செய்துள்ளது. இதன் கீழ், EPFO 3.0 என்ற புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. EPFO 3.0 இன் கீழ் கிடைக்கும் வசதிகள் மற்றும் புதிய அம்சங்கள் பற்றிய தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Mobile App: எளிய அணுகலுக்கான புதிய மொபைல் செயலி
EPFO 3.0 இன் கீழ் ஒரு புதிய மொபைல் செயலி தொடங்கப்படும். இந்த செயலியின் மூலம், இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தங்கள் இபிஎஃப் கணக்கு இருப்பை (EPF Account Balance) எளிதாக செக் செய்யலாம். கூடுதலாக, பிஎஃப் பணத்தை க்ளெய்ம் செய்வதும் மிகவும் எளிதாகிவிடும். தற்போது, PF கணக்கிலிருந்து பணத்தை கோருவதற்கு ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். இது சிக்கலானதாக இருக்கலாம். இருப்பினும், புதிய செயலியின் மூலம், ஊழியர்கள் எளிதாக பணத்தை க்ளெய்ம் செய்ய முடியும்.
PF ATM Card: PF பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு வசதி
EPFO 3.0 இன் கீழ், ஊழியர்கள் தங்கள் PF கணக்குகளிலிருந்து பணம் எடுக்க ஒரு புதிய வசதியையும் பெறுவார்கள். அவர்களுக்கு ATM அட்டையைப் போன்ற ஒரு அட்டை வழங்கப்படும். இதை பயன்படுத்தி அருகிலுள்ள ATM இலிருந்து எளிதாக பணம் எடுக்க முடியும். இருப்பினும், பணம் எடுக்க வரம்பு நிர்ணயிக்கப்படும். உறுப்பினர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து ஒரு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே எடுக்க முடியும்.
EPFO 3.0 vs Current System: தற்போதுள்ள அமைப்புக்கும் புதிய அமைப்புக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
தற்போதைய அமைப்பு குறித்து, இபிஎஃப் உறுப்பினர்கள் பல புகார்களை எழுப்பியுள்ளனர். குறிப்பாக, PF கணக்குகளில் இருந்து பணத்தை எடுப்பதற்கும், க்ளெய்ம் செய்வதற்கும் உள்ள நீண்ட செயல்முறை குறித்து அதிக புகார்கள் உள்ளன. இதற்கு மாறாக, EPFO 3.0 மிகவும் திறமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஊழியர்கள் தங்கள் PF நிதியை அணுகுவது எளிதாகும் என கூறப்படுகின்றது.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு அதிகரிக்கும் வசதிகள்
தற்போது, ஒரு க்ளெய்மை தாக்கல் செய்த பிறகு பணத்தைப் பெற 7-10 நாட்கள் ஆகும். ஆனால் EPFO 3.0 -இல், இந்த செயல்முறை கணிசமாக மேம்படுத்தப்படும். பணத்தை பெறுவதற்கான நேரம் பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், உறுப்பினர்கள் குறைகளை தீர்க்க எடுத்துக்கொள்ளப்படும் நேரமும் கணிசமாக குறையும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | EPFO Update: PF விதிகளில் முக்கிய மாற்றங்கள்... பல வேலைகள் இனி எளிதாகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ