மகாராஷ்டிரா: ஆயுத தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து, 5 பேர் பலி

Maharashtra Blast: மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நகர் பகுதியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 24, 2025, 01:28 PM IST
  • மகாராஷ்டிரா ஆயுத தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து.
  • 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல்.
  • மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
மகாராஷ்டிரா: ஆயுத தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து, 5 பேர் பலி title=

Maharashtra Blast: மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் உள்ள ஜவஹர் நகர் பகுதியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இங்கு மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த வெடிவிபத்தில் தொழிற்சாலையின் கூரை இடிந்து விழுந்தது. மேலும் இடிபாடுகளை அகற்றும் பணியில் மண் அள்ளும் கருவிகள் தற்போது ஈடுபட்டுள்ளன.

இந்த சம்பவம் காலை 10:30 மணியளவில் நடந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மீட்புக் குழுவினரும் மருத்துவப் பணியாளர்களும் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினர் உயிரிழப்பு சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையைக் கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

"வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஒரு கூரை இடிந்து விழுந்துள்ளது. அதை ஜேசிபி உதவியுடன் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 12 பேர் அங்கு இருப்பதாக தெரிகிறது. மீட்பு பணிகள் நடந்துவருகின்றன" என மாவட்ட ஆட்சியர் சஞ்சய் கோல்டே மேலும் விவரங்களை வழங்கினார்.

குண்டுவெடிப்பின் தீவிரம் மிகவும் கடுமையாக இருந்ததால் 5 கி.மீ தூரம் வரை அதன் சத்தம் கேட்டது. சமூக ஊடகமான ‘X’ இல் இதன் பல வீடியோக்கள் வெளியாகின. தொழிற்சாலையிலிருந்து அடர்த்தியான புகை மூட்டங்கள் வெளியேறுவதை இந்த வீடியோ கிளிப்புகள் காட்டுகின்றன.

மேலும் படிக்க | மகாராஷ்டிராவில் கோரம்: 8 பேர் உடல் சிதறி இறந்த கோரம் - ரயில் விபத்து நடந்தது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News