Budget 2025: மிடில் கிளாஸ் மக்களுக்கான இந்த 7 தேவைகள் - நிறைவேற்றுமா பட்ஜெட்?

Budget 2025: வரும் 2025 மத்திய பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கானதாக இருக்க வேண்டும் என்றும் அதில் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த 7 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் பேசி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 22, 2025, 03:01 PM IST
  • மத்திய பட்ஜெட் வரும் பிப். 1ஆம் தேதி தாக்கல் ஆகிறது.
  • நடுத்தர வர்க்கத்தினருக்கு என AAP தனி தேர்தல் அறிக்கை
  • வரும் பிப். 5ஆம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல்
Budget 2025: மிடில் கிளாஸ் மக்களுக்கான இந்த 7 தேவைகள் - நிறைவேற்றுமா பட்ஜெட்? title=

Budget 2025, Expectations For Middle Class: டெல்லி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப். 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பிப். 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தற்போது தேர்தல் பரப்புரை உச்சத்தில் உள்ளது. இந்த தேர்தலில், இந்தியா கூட்டணி இல்லாமல் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தனித்து நிற்கிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக என முத்தரப்பு போட்டி நிலவி வருகிறது.

இருப்பினும், டெல்லியில் ஆட்சியை பிடிப்பதில் ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும்தான் அதிக போட்டி எனலாம். இதில் சாமானிய மனிதனுக்கான கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு டெல்லியில் வளர்ச்சி அடைந்து ஆட்சியை பிடித்த கட்சிதான் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி.

நடுத்தர வர்க்கம்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை...

ஆம் ஆத்மி கட்சியின் பெரும்பான்மையான ஆதரவு வாக்காளர்கள் நடுத்தர வர்க்கத்தினர்தான். அப்படியிருக்க அவரும் நடுத்தர மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து வந்தார். அந்த வகையில், தற்போதைய தேர்தல் சீசனிலும் தனது கவனத்தை நடுத்தர வர்க்கத்தினர் மீது திருப்பி உள்ளார்.

மேலும் படிக்க | Budget 2025: பட்ஜெட்டில் அட்டகாசமான அறிவிப்பு, இரட்டிப்பாகும் ஓய்வூதிய தொகை

அதாவது, டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு என வாக்குறுதிகள் அடங்கிய தனி தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது. பெரும்பாலான கட்சிகள் குறிப்பிட்ட சமூகத்தினர், மதத்தினர் மற்றும் ஏழைகள் ஆகியோரை குறிவைத்து வாக்குறுதிகளை வழங்குவார்கள், முதல் முறையாக இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினருக்கு என தேர்தல் அறிக்கை வருகிறது. இந்தியாவில் அதிக வரி கட்டுபவர்கள் நடுத்தர வர்க்கத்தினர்தான். ஆனால் அவர்களுக்கு பெரும்பாலான கட்சிகள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

பாதிக்கப்படும் நடுத்தர வர்க்கம்

ஆனால், இதையெல்லாம் உடைத்தெறிந்து, பிற கட்சிகளுக்கான சரியான மாற்றாக இருப்போம் என்று கூறிதான் ஆம் ஆத்மி கட்சி முதன்முதலாக கடந்த 2014ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலை சந்தித்தது. குறிப்பாக, உயர் நடுத்தர வர்க்கம், நடுத்தர வர்க்கம், கீழ் நடுத்தர வர்க்கம் ஆகிய மூன்று தரப்புக்கும் கல்வி, போக்குவரத்து, குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றில் சிறப்பான திட்டங்களை கொண்டுவந்து அம்மக்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வோம் என்பதே அவர்களின் வாக்குறுதியாக இருந்தது.

அப்படியிருக்க, தற்போது டெல்லி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு முதன்முதலாக நடுத்தர வர்க்கத்தினருக்கு என தனி தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் வரி பயங்கரவாதத்தால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளானவர்கள் என இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,"ஆசிரியர்கள், மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் நடுத்தர வர்க்கத்தினர்தான். நடுத்தர வர்க்கத்தினர் ரூ.10- ரூ.12 லட்சம் வருமானமாக பெற்று, அதில் எண்ணெற்ற வரிகளையும் செலுத்துகிறார்கள். இந்த அரசு அவர்களை வருமான வரி, சாலை வரி, செஸ் வரி என் பல வரிகளை செலுத்த கூறி வற்புறுத்துகிறது.

மேலும் படிக்க | Budget 2025: ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அனுகூலமான அறிவிப்புகள் வருமா? வரி முறைகள் மாறுமா?

நடுத்தர வர்க்கத்திற்கு ஆம் ஆத்மி என்ன செய்தது?

நிதி சிக்கல் காரணமாக, இளம் தம்பதியினர் கூட குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை நோக்கி செல்கின்றனர். அரசாங்கம் அதன் வரி வருவாயை மக்கள் நலனுக்காகவோ இல்லை அவர்களின் நிறுவன நண்பர்களுக்கு கடன் தள்ளுபடியாகவோ கூட செலவிடலாம். டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அதன் வரி வருவாயை கொண்டு கல்வி மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்தியது. எங்கள் அரசின் கீழ் கிட்டத்தட்ட நான்கு லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு வந்துள்ளனர். இது வேறெங்கும் இல்லாதது.

Budget 2025: நடுத்தர வர்க்கத்தினருக்காக செய்ய வேண்டியவை

மேலும், வரும் 2025 மத்திய பட்ஜெட் (Union Budget 2025) நடுத்தர வர்க்கத்தினருக்காக இருக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த பட்ஜெட்டை முன்னிட்டு 7 கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார். அவற்றை ஒவ்வொன்றாக காணலாம். 

- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கான பட்ஜெட் 2% ஆக உள்ளது. இதனை 10% ஆக உயர்த்த வேண்டும். தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணங்கள் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்.

- உயர் கல்விக்கு மானியங்கள் மற்றும் உதவித்தொகைகள் வழங்கப்பட வேண்டும்.

- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதார பட்ஜெட்டை 10% ஆக அதிகரிக்க வேண்டும். மேலும் சுகாதார காப்பீடுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும். 

- வருமான வரி விலக்கு வரம்பு ரூ.7 லட்சமாக உள்ளது. இது ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட வேண்டும்.

- அத்தியாவசியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரக் கூடாது.

- மூத்த குடிமக்களுக்கான முன்னர் வழங்கப்பட்டு வந்த ரயில்வே சலுகைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

- மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில், வலுவான ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களை கொண்டுவர வேண்டும். 

மேலும் படிக்க | பட்ஜெட் 2025: வருமான வரி விதிப்பில் 3 அதிரடி மாற்றங்கள்! வெளியான முக்கியத் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News