தவெக தலைவர் விஜய் சொன்னது உண்மைதான் - நடிகை கௌதமி அதிரடி!

எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு நல திட்டங்கள் உதவி வழங்கும் விழா அதிமுக சார்பில் ஆர் எஸ் ராஜேஷ் தலைமையில் கொருக்குப்பேட்டையில் நடைபெற்றது. இதில் நடிகை கௌதமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

Written by - RK Spark | Last Updated : Jan 21, 2025, 08:42 AM IST
  • எடப்பாடியார் மக்களுக்கு உதவினார்.
  • கொரோனா காலத்திலும் நிறைய செய்தார்.
  • அதிமுக கவுதமி சென்னையில் பேட்டி.
தவெக தலைவர் விஜய் சொன்னது உண்மைதான் - நடிகை கௌதமி அதிரடி! title=

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு 2108 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் தலைமையில், நடிகையும் அதிமுகவின் கொள்கை துணை பரப்பு செயலாளருமான கௌதமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், சத்யராஜ் மகள் திமுகவில் இணைந்தது அவரது தனிப்பட்ட விருப்பம். இதற்கு பிறகு அவரது நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது தெரியும். மக்களுடைய நாடித்துடிப்பு, மக்கள் விருப்பம் எப்படி இருக்கு, கஷ்டங்கள் என்ன என்பதை உணர்ந்து இருக்கிறார்கள் எடப்பாடி.

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை! அதிகபட்சம் ரூ. 25,000.. -முழு விவரம்

மக்கள் பாதிப்புகள் அனைத்தும் தெரிந்து கொண்டு சரியான கணக்காக சொல்லி இருக்கார், யார் என்ன சொன்னாலும் அவர் சொல்ல வேண்டிய கட்டத்தில் எடப்பாடியார் சொல்லி உள்ளார். தமிழ்நாட்டில் பொதுமக்கள் பார்க்காத அளவிற்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. குழந்தைகள் வீட்டை விட்டு சென்றாலோ, பெண்கள் வேலைக்கு சென்றாலும், கல்லூரி மற்றும் பள்ளிக்குச் சென்று வீட்டிற்கு பாதுகாப்பாக திரும்புவார்களா என்பது நிச்சயம் இல்லாமல் இருக்கிறது. பெற்றவர்கள் பயத்தில் வாழ்கிறார்கள் என்பதை தினமும் அனுபவிக்கின்றனர்.

விலைவாசி அளவில்லாமல் ஏறிவிட்டது, மின் கட்டணம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது, வீட்டு வரிகள் உயர்ந்துள்ளது, சொந்த வீடு சின்னதா கட்டி குடும்பத்துடன் வாழலாம் என்று நினைக்கும் சாதாரண மக்களுடைய கனவு எட்டாத தூரத்தில் உள்ளது. கட்டுமான பொருட்கள் விலைவாசி அதிகமாக உள்ளது. மக்கள் நல்லா இருக்கணும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், சந்தோஷமாக வாழ வேண்டும், வளரனும் முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தோட ஒரு செயல்பாடு கூட கண்ணுக்குத் தெரியவில்லை, விஜய் சொன்னது உண்மைதான் எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது அவர்கள் நிலைபாடு அதற்கு நேர் மாறாக உள்ளது, அது உண்மைதான். 2026ல் 100 சதவீதம் மாற்றம் ஏற்படும், மக்களுடைய கஷ்டங்கள் மற்றொரு வழிவேதனை ஆதங்கம் மாறும். 523 வாக்குறுதிகள், ஒரு வாக்குறுதி பெண்கள் உரிமை தொகை, அதுவும் 33 மாதம் கழித்து கொடுத்தார்கள். அதுவும் சட்டசபை எதிர்க்கட்சி  தலைவர் எடப்பாடி குரல் கொடுத்து ஒவ்வொரு நிர்வாகத்தையும் போராடி உரிமை தொகை கொடுத்தார்கள். பொங்கல் வருட வருடம் வரும். எடப்பாடி ஆட்சியில் பொதுமக்கள் நல்ல நிலையில் கொண்டாடினர்.

குடும்பத்தோட சந்தோஷமாக கொண்டாடுவதற்காக அத்தனை பொருட்களும், 2500 பணம் சந்தோஷமாக இருந்து உண்மையாக பண்டிகையை கொண்டாடுவதற்காக எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார். கொரோனா காலத்தில் கடுமையான நிதி நெருக்கடியிலும் என்ன இருந்தாலும் எப்படி இருந்தாலும் மக்களுக்கு வரவேண்டிய நல்ல திட்டங்கள் உரிமைகளும் எந்த காரணத்திற்காக நிக்கக்கூடாது என்பதற்காக கொரோனா சூழ்நிலையிலும் தமிழர் திருநாள் கொண்டாடுவதற்காக அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்தார். ஓபிஎஸ் மேலும் மேலும் என்ன சொல்ல வரார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று பேசி உள்ளார்.

மேலும் படிக்க | அனல் பறந்த விஜய் பேச்சு!! பரந்தூரில் அவர் பேசிய விஷயங்கள் என்னென்ன? ஹைலைட்ஸ் இதோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News